விருதுநகர்: ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு; முதியவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு; நடந்தது என்ன?
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சுந்தரபாண்டியம் பேரூராட்சியில் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயின் நீர்வழிப்பாதை அருகே பட்டியலினச் சமுதாயத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாகக் குடியிருந்து வருகின்றனர்.
இந்நிலையில், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அரசு உத்தரவிட்டிருப்பதைத் தொடர்ந்து கண்மாய் நீர் வழித்தடம் அருகே உள்ள ஆக்கிரமிப்புகளையும், ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகளையும் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் அகற்றவேண்டும் எனவும், அவ்விடத்தில் வசிப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டு அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
ஆனால் அங்குள்ள மக்கள், குடியிருப்புகளைக் காலி செய்ய மறுத்து விட்டனர். இந்நிலையில், அவகாச தேதி கடந்துவிட்டதால், நேற்று (ஜனவரி 21) ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு ஜே.சி.பி. இயந்திரத்துடன் அதிகாரிகள் அங்கு வந்தனர். அப்போது அவர்களை முற்றுகையிட்ட அப்பகுதி பொதுமக்கள், ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, தங்களுக்குக் குடியிருப்புக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தை அரசு உடனடியாக வழங்க வேண்டும் எனவும், குடியிருப்புகள் கட்டுவதற்குத் தமிழக அரசு எங்களுக்கு உதவி புரிய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். முற்றுகையிட்ட பொதுமக்களுடன் காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, குடியிருப்பு ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பட்டியலின குடும்பத்தினருக்கு ஆதரவாகத் தனக்குத்தானே உடலில் பெட்ரோல் ஊற்றித் தீக்குளிக்க முதியவர் ஒருவர் முயன்றார். இதையடுத்து சுதாரித்த காவல்துறையினர், முதியவரைத் தடுத்து நிறுத்திக் காப்பாற்றினர்.
இதைத்தொடர்ந்து அவர், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூடுதலாக 10 நாட்கள் அவகாசம் அளித்து அதிகாரிகள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs