செய்திகள் :

விருதுநகர்: 7 வயது சிறுமிக்குப் பாலியல் கொடுமை; பக்கத்து வீட்டுக்காரர் கைது; நடந்தது என்ன?

post image

விருதுநகர் அருகே 7 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த நபரை விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம்.

அப்போது நம்மிடம் பேசியவர்கள், "விருதுநகர் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் நாராயணன். இவரின் வீட்டுக்கு அருகே பள்ளி பயிலும் 7 வயது சிறுமி தனது தோழிகளுடன் விளையாடுவது வழக்கம்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

இந்நிலையில் கிருஷ்ணன் நாராயணனின் உறவினர் பெண், தான் வாங்கிய முருங்கைக்காய்களை, தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 7வயது சிறுமியிடம் கொடுத்து அதைக் கிருஷ்ணன் நாராயணனிடம் கொடுத்து வரும்படி அனுப்பி வைத்துள்ளார்.

அதன்படி சிறுமியும், அவரின் வீட்டிற்குச் சென்றுவிட்டுத் திரும்பும்போது வலுக்கட்டாயப்படுத்தி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதே போன்று, தொடர்ச்சியாகக் கிருஷ்ணன் நாராயணன் சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்துள்ளார்.

இதனால் பயந்துபோன சிறுமி, அதன்பின்னர் தெருவில் அவரைக் கண்டாலே வீட்டுக்குள் ஓடிவந்து ஒளிந்துவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இதைப் பார்த்துச் சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர், அவரை அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது தனக்கு நடந்த கொடுமையைச் சொல்லி சிறுமி பயந்தவாறே அழுதுள்ளார்.

பாலியல் வன்கொடுமை

இதையடுத்து, பாலியல் அத்துமீறல் தொடர்பாகச் சிறுமியின் பெற்றோர் விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், விசாரணை நடத்தி கிருஷ்ணன் நாராயணனைக் கைது செய்தனர்" எனக் கூறினர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

சென்னை: ரூ.17 லட்சம், 4 செல்போன்கள் - மாப்பிள்ளை என அழைத்து ஏமாற்றிய மணமகளின் அப்பா!

சென்னை வில்லிவாக்கம் நியூ ஆவடி சாலையில் வசித்து வருபவர் ஜெயபிரகாஷ் (31). இவர் வில்லிவாக்கம் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு ஜெயபிரகாஷ், மணமகள் தேவை என் திருமண தக... மேலும் பார்க்க

தலைக்கேறிய மதுபோதை... தந்தையை கட்டையால் அடித்துக் கொன்ற மகன்! - திருச்சி அதிர்ச்சி

திருச்சி, திருவானைக்காவல் அழகிரிபுறம் அருகே உள்ள ஏ.யூ.டி நகரில் வசித்து வந்தவர் சோமசுந்தரம் (வயது: 45). இவர், சமயபுரம் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். இவரது மகன் மோகன்ர... மேலும் பார்க்க

சென்னை: 12 வயதில் மாயமான சிறுமி 18 வயதில் மீட்கப்பட்டது எப்படி?

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரம்யா (பெயர் மாற்றம்). இவர் லேப் ஒன்றில் உதவியாளராக இருந்து வருகிறார். இவரின் 12 வயதான மகள் அரும்பாக்கம் பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த... மேலும் பார்க்க

டெல்லி இளைஞர் படுகொலை; விசாரணை வளையத்தில் `Zikra' - துப்பாக்கியுடன் வலம் வரும் இந்த Lady Don யார்?

டெல்லி ஷீலம்பூர் பகுதியில் சமீபத்தில் குனால்(17) என்ற வாலிபர் பட்டப்பகலில் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். நேற்று முன் தினம் குனால் தனது வீட்டில் இருந்து பால் வாங்குவதற்காக வெளியில் கிளம்பிய போ... மேலும் பார்க்க

மணமேடையில் அதிர்ந்த மணமகன் - மணப்பெண் என காட்டப்பட்டவரின் தாயாரை திருமணம் செய்து வைக்க முயற்சியா?

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள பிரம்புரி என்ற இடத்தைச் சேர்ந்தவர் மொகமத் அசிம்(22). அசிம் பெற்றோர் இறந்துவிட்டனர். இதனால் தனது பூர்வீக வீட்டில் தனது சகோதரர் நதீமுடன் வசித்து வந்தார். இவருக்கு அவ... மேலும் பார்க்க

கேரளா: "பொய்யாக பாலியல் புகார் அளித்தேன்" - 7 ஆண்டுக்குப் பின் மன்னிப்பு கேட்ட மாணவி; நடந்தது என்ன?

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கருநாகப்பள்ளியை அடுத்த குறுப்பந்தறவு பகுதியில் பாராமெடிக்கல் கல்வி நிறுவனம் ஒன்று செயல்பட்டுவந்தது.அந்த கல்வி நிறுவனத்தைக் கோட்டயம் மதுரவேலி பகுதியைச் சேர்ந்த சி.டி.ஜோமோ... மேலும் பார்க்க