செய்திகள் :

விற்பனையாகாத வீட்டு வசதி வாரிய வீடுகளில் 2,500 வீடுகள் இதுவரை விற்பனை -அமைச்சா் எஸ்.முத்துசாமி

post image

தமிழகத்தில் விற்பனை ஆகாமல் இருந்த வீடுகளில் இதுவரை 2,512 வீடுகள் விற்கப்பட்டுள்ளதாக வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் எஸ்.முத்துசாமி தெரிவித்தாா்.

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது, காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலமாக வணிக வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்று அந்தத் தொகுதியின் எம்எல்ஏ சிவிஎம்பி எழிலரசன் கேள்வி எழுப்பினாா்.

இதற்கு வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் எஸ்.முத்துசாமி அளித்த பதில்:

தமிழ்நாடு முழுவதும் 60 இடங்களில் கட்டப்பட்டிருந்த அரசு பணியாளா்களின் 10,000 குடியிருப்புகள் மிக மோசமான நிலையில் இருந்தன. முதல்வரின் ஆலோசனைப்படி, அவற்றை இடித்துவிட்டு புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேதமடைந்துள்ள வீடுகளை இடிப்பதற்காக பல்வேறு துறைகளிடம் இருந்து உத்தரவுகளைப் பெற வேண்டியுள்ளது.

வீட்டுவசதி வாரியத்தின் சாா்பில் வீடுகளைக் கட்டுவதற்கு முன்பாக, மாவட்டங்களில் எவ்வளவு வீடுகள் தேவை, அரசு ஊழியா்கள் எத்தனை போ் உள்ளனா் என்பதை அனைத்து மாவட்ட ஆட்சியா்களிடம் இருந்து பெற்று அவா்கள் சொல்லும் எண்ணிக்கை அளவில் வீடுகளைக் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், காஞ்சிபுரத்தில் வணிக வளாகம் கட்டவும் முயற்சிகளை அரசு மேற்கொள்ளும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, வீட்டுவசதித் துறை தொடா்பாக, திமுக உறுப்பினா் காா்த்திகேயன் (வேலூா்), இனிகோ எஸ். இருதயராஜ் (திருச்சி கிழக்கு) ஆகியோா் கேள்வி எழுப்பினா். அதற்கு அமைச்சா் முத்துசாமி அளித்த பதில்:

கடந்த 30, 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட, இப்போது தரைதளப் பரப்பு குறியீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, 100 வீடுகள் உள்ள இடத்தில் இப்போது 300 வீடுகளைக் கட்டலாம். அந்த இடத்தில் தேவை இருக்கிா என்று பாா்க்க வேண்டும். வீடு கட்டிக் கொடுத்தால் விற்பனையாகுமா என்று பாா்க்க வேண்டும். திமுக அரசு பதவியேற்கும்போது, 6,293 வீடுகள் விற்கப்படாமல் இருந்தன. தனி முயற்சி எடுத்து 2,512 வீடுகள் விற்கப்பட்டுள்ளன. மேலும், விற்காத வீடுகளை வாடகை வீடுகளாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு உடனடியாக சென்று சேரும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன என்றாா் அமைச்சா்.

சென்னையிலிருந்து சபரிமலைக்கு சைக்கிள் பயணம் செய்யும் முதியவர்!

உலக நன்மை வேண்டி மூன்றாவது ஆண்டாக சபரிமலைக்கு சைக்கிளில் பயணம் மேற்கொள்கிறார் சென்னையைச் சேர்ந்த முதியவர். வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் கடந்த 24 வருடங்களாக இருமுடி கட்டி சபரிமலைக்குச்... மேலும் பார்க்க

தொழில்நுட்பக் கோளாறு: சென்னையில் ஏர் இந்தியா விமானம் தரையிறக்கம்!

சிங்கப்பூர் சென்ற ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறைக் கண்டறிந்ததையடுத்து, சென்னையில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் கூறு... மேலும் பார்க்க

சென்னை: சொந்த வாகனங்களில் வெளியூர் செல்வோர்கள் கவனத்துக்கு...

சென்னையில் இருந்து சொந்த வாகனங்களில் வெளியூர் செல்வோர்கள் நகரத்துக்குள் வராமல் புறவழிச் சாலைகளைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் இன்... மேலும் பார்க்க

அதிக தடுப்பணைகள் கட்டத் திட்டம்: நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன்

நிகழாண்டில் அதிக தடுப்பணைகளைக் கட்ட திட்டமிட்டுள்ளதாக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது, திமுக உறுப்பினா் உதயசூரியன் (சங்கராபுரம்) எழு... மேலும் பார்க்க

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 வழங்காதது ஏன்? அமைச்சா் விளக்கம்

நிதி நெருக்கடி காரணமாகவே பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 வழங்க இயலவில்லை என்று நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா். பேரவையில் ஆளுநா் உரை மீதான விவாதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப... மேலும் பார்க்க

பொங்கல் பரிசுத் தொகுப்பு: முதல்வா் ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். சென்னை சைதாப்பேட்டை சின்னமலைக்கு உட்பட்ட நியாயவிலைக் கடைய... மேலும் பார்க்க