BB Tamil 9: ``அரோரா இருக்க இடத்துலதான் துஷார் இருப்பான்" - BB அப்சரா பேட்டி | Ex...
விலங்குகளுக்கான தீபாவளி எப்படி இருக்கும்? நாம் என்ன செய்யலாம்?
ஒளி, மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டத்தின் திருவிழாவான தீபாவளி, மனிதர்களுக்குப் பிரகாசமான நினைவுகளைத் தந்தாலும், விலங்குகளுக்கு இது பெரும்பாலும் பயம் மற்றும் துன்பத்தின் காலமாகவே இருக்கிறது.
பட்டாசுகளின் சத்தம், செல்லப்பிராணிகள் மற்றும் தெரு விலங்குகள் இரண்டையும் கடுமையாக பாதிக்கின்றன. மனிதர்களின் கொண்டாட்டம் விலங்குகளுக்கு எப்படி திண்டாட்டமாக மாறுகிறது என்பதைப் பற்றியும் விரிவாகக் காணலாம்.
விலங்குகளை இந்த பட்டாசு சத்தம் எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து கால்நடை விரிவாக்க கல்வித்துறை பேராசிரியர் முனைவர். க. தேவகி விகடனுக்கு பகிர்ந்துகொண்டுள்ளார்.

முனைவர். க. தேவகி கூற்றுப்படி, பட்டாசுகளின் பயங்கர சத்தம் நாய்கள், பூனைகள் போன்ற விலங்குகளுக்குக் கடுமையான பதற்றத்தையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது. இதனால் அவை நடுங்குதல், மூச்சு வாங்குதல், பாதுகாப்பான இடங்களைத் தேடி ஒளிந்து கொள்ளுதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன.
பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் திடீர் சத்தத்தால் விலங்குகள் பீதியடைந்து சாலைகளில் ஓடும்போது வாகனங்களில் அடிபட்டு இறக்கின்றன. பல விலங்குகள் தீக்காயங்களால் பாதிக்கப்படுகின்றன.
பட்டாசு சத்தத்தால் பயந்துபோகும் பல செல்லப்பிராணிகளும், தெரு விலங்குகளும் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெகுதூரம் ஓடிவிடுகின்றன” என்று கூறுகிறார் முனைவர். தேவகி.
தீபாவளி பண்டிகையின் போது சுமார் 30% தெரு நாய்கள் காணாமல் போவதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.
எப்படி பாதுகாப்பு?
மேலும் அந்த விஷயங்களை எப்படி பாதுகாப்பாக எடுத்துபோது என்பது குறித்து விளக்குகிறார் முனைவர். க. தேவகி. இது குறித்து அவர் கூறியதாவது”தீபாவளியன்று உங்கள் செல்லப்பிராணிகளை வீட்டிற்குள்ளேயே வைத்திருங்கள். ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி, பட்டாசு சத்தம் குறைவாகக் கேட்கும் ஒரு அறையில் அவற்றுக்கு வசதியான இடத்தை ஏற்படுத்திக் கொடுங்கள்.
பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்கும்போது, விலங்குகளுக்குப் பிடித்த இசையை ஒலி அல்லது அவைகளுக்கு வழக்கமான டிவி சத்தத்தை ஏற்படுத்துவது மூலமோ, அவற்றுடன் விளையாடுவதன் மூலமோ அவற்றின் கவனத்தை திசை திருப்பலாம். செல்லப்பிராணிகளுக்கு வீட்டின் பாதுகாப்பு ஓரளவிற்கு இருந்தாலும், தெரு விலங்குகளின் நிலை மிகவும் மோசமானது. அவற்றுக்கு ஒளிந்துகொள்ள பாதுகாப்பான இடங்கள் கிடைப்பதில்லை, பொதுகழிப்பறைகளில் சென்று ஒளிந்துக்கொள்ளும், அல்லது பட்டாசு சத்தம் கேட்கும் அந்த குறிப்பிட்ட இடத்திலேயே இருக்காது என்றார் முனைவர். க. தேவகி.