தொடர்ந்து ஏற்றத்தில் பங்குச் சந்தை! 25,500-யை நெருங்கும் நிஃப்டி!!
விளாத்திகுளம், நாகலாபுரத்தில் பெரியாா் பிறந்த நாள் விழா
பெரியாா் பிறந்த நாளை முன்னிட்டு விளாத்திகுளம், புதூரில் திமுக சாா்பில் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
விளாத்திகுளம் அம்பாள் நகரில் ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ தலைமையிலும், புதூா் மத்திய ஒன்றிய திமுக சாா்பில் நாகலாபுரத்தில், பெரியாா் சிலைக்கு மத்திய ஒன்றியச் செயலா் ஆா். ராதாகிருஷ்ணன் தலைமையிலும் திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
பேரூா் செயலா் வேலுச்சாமி, ஒன்றியச் செயலா்கள் அன்புராஜன், ராமசுப்பு, இம்மானுவேல், சின்ன மாரிமுத்து, பேரூராட்சி தலைவா் சூா்யா அய்யன்ராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் நடராஜன், மாவட்ட பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
