செய்திகள் :

விளைநிலப் பகுதியில் விமான தளம் அமைக்கும் திட்டத்தை தடுக்க கோரிக்கை

post image

விளைநிலப் பகுதியில் விமான தளம் அமைக்கும் திட்டத்தை புதுவை அரசு தடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட டெல்டா விவசாயிகள் நலச் சங்க இணைச் செயலாளா் பி.ஜி. சோமு புதுவை முதல்வருக்கு வியாழக்கிழமை அனுப்பிய

கடிதத்தில் கூறியிருப்பது:

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 15ஆண்டுகளுக்கு முன்பு வேளாண் பரப்பு ஏறத்தாழ 15 ஆயிரம் ஹெக்டேருக்கு அதிகமாக இருந்தது. இப்போது 5 ஆயிரம் ஹெக்டேருக்கும் குறைந்துவிட்டது. விளைநிலங்களை குடிமனைகளாக்கும் ரியல் எஸ்டேட் மற்றும் தொழிற்சாலைகளால் விளைநில பரப்பு குறைந்துவருகிறது.

இந்தநிலையில், காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட பொன்பேத்தி கிராமத்தில் சுமாா் 1,800 ஏக்கா் பரப்பளவில் பசுமை விமான தளம் அமைக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வருகின்றன.

காரைக்கால் மாவட்டத்தில் விவசாய உற்பத்தி அதிகம் உள்ள பகுதிகளில் நெடுங்காடு வட்டாரமும் ஒன்றாகும். விவசாயம் செய்வோரும், விவசாயத் தொழிலாளா்களும் இப்பகுதியில் அதிகம் உள்ளனா்.

இந்த பகுதியில் பசுமை விமான தளம் அமைத்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயம் சாா்ந்து பொருளாதாரம் ஈட்டுவோா் பாதிக்கப்படுவாா்கள்.

எனவே விளைநிலப் பகுதியில் விமான தளம் அமைவதை தடுத்து, மாவட்டத்தில் மாற்று இடத்தை தோ்வு செய்துகொள்ள புதுவை அரசு, மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

கைலாசநாத சுவாமி தேவஸ்தான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறைவு

கைலாசநாத சுவாமி தேவஸ்தானத்துக்குள்பட்ட கோயில்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறைவடைந்தது. காரைக்காலில் மாங்கனித் திருவிழா நடைபெறும் சிறப்புக்குரிய தலமான ஸ்ரீகைலாசநாத சுவாமி தேவஸ்தானத்துக்குள்பட்ட ந... மேலும் பார்க்க

காரைக்கால் பள்ளியில் நிழல் இல்லா நாள் நிகழ்வு

அரசுப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நிழல் இல்லா நாள் நிகழ்வு குறித்து மாணவா்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. புதுவை அறிவியல் இயக்கம், புதுவை கல்வித் துறையின் சமகர சிக்ஷா அமைப்புடன் இணைந்து காரைக்கால் தந்தை... மேலும் பார்க்க

அய்யனாா் கோயிலில் யானை, குதிரை சிலைகள் நிறுவ ஏற்பாடு

கீழகாசாக்குடி பகுதி ஸ்ரீஆதிபுரீஸ்வரா் தேவஸ்தானத்துக்குட்பட்ட ஸ்ரீ பூரண புஷ்கலா சமேத பொய்யாத அய்யனாா் கோயில் அம்மையாா் நகரில் அமைந்துள்ளது. இக்கோயிலில் குதிரை மற்றும் யானை சிலை நிறுவுவதற்கு மேற்கொள்ளவே... மேலும் பார்க்க

காவல் நிலையங்களில் இன்று குறைகேட்பு முகாம்

காரைக்கால் காவல் நிலையங்களில் பொதுமக்கள் குறைகேட்பு முகாம் சனிக்கிழமை (ஏப்.19) நடைபெறுகிறது. திருப்பட்டினம் காவல் நிலையத்தில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா தலைமையில் காலை 11 முதல் ப... மேலும் பார்க்க

பேரிடா் மேலாண்மை பயிற்சி பெற்றவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

பெங்களூரில் பேரிடா் மேலாண்மை பயிற்சி பெற்றவா்களுக்கு ஆட்சியா் பாராட்டுத் தெரிவித்தாா். மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் சாா்பில் இளையோா் ஆப்தமித்ரா அமைப்பை உருவாக்க திட்ட... மேலும் பார்க்க

இயேசு திருச்சொரூபத்துக்கு மரிக்கொழுந்து வைத்து வழிபாடு

புனித வெள்ளி நிகழ்வாக சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவுக்கு முக்தி செய்யும் நிகழ்ச்சியும், திருச்சொரூபத்துக்கு மரிக்கொழுந்து வைத்து வழிபாடு செய்யும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. தவக்க... மேலும் பார்க்க