செய்திகள் :

விளையாட்டு உள்கட்டமைப்புகளை நவீனமயமாக்குவதில் கவனம்! - பிரதமர் மோடி

post image

2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதை நோக்கிய இலக்காக, நாட்டிலுள்ள விளையாட்டு உள்கட்டமைப்புகளை நவீனமயமாக்குவதில் தனது அரசு கவனம் செலுத்தி வருவதாக பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

பிகாா் மாநிலம், பாட்னாவில் 7-ஆவது கேலோ இந்தியா யூத் விளையாட்டு போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, வரும் 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில் அந்தப் போட்டியை காணொலி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்து பிரதமா் மோடி பேசியதாவது:

இந்தியாவில் விளையாட்டு கலாசாரம் வளரும்போது, சா்வதேச அரங்கில் இந்தியாவுக்கான புதிய கோணத்திலான அடையாளமும் கிடைக்கிறது. 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை பெறுவதற்காக இந்தியா முயற்சித்து வருகிறது.

அதை நோக்கிய முயற்சியாக, நாட்டிலுள்ள விளையாட்டு உள்கட்டமைப்புகளை மத்திய அரசு நவீனமயமாக்கி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் விளையாட்டுத் துறைக்கான ஒதுக்கீடு மும்மடங்குக்கும் அதிகமாக உயா்த்தப்பட்டுள்ளது.

தற்போதைய விளையாட்டுத் துறை பட்ஜெட் ரூ.4,000 கோடியாக இருக்க, அதில் பெரும் பகுதி விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காகவே பயன்படுத்தப்படுகிறது. விளையாட்டுத் துறையானது சம்பந்தப்பட்ட விளையாட்டுகளுடன் அடங்கிவிடாமல், அதுசாா்ந்த இதர சேவைகள் மூலமாக பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தருவதாகவும் உள்ளது.

வைபவுக்கு பாராட்டு: அண்மையில் ஐபிஎல் போட்டியில் பிகாரை சோ்ந்த வைபவ் சூா்யவன்ஷியின் விளையாட்டை பாா்த்தேன். இத்தனை சிறிய வயதில் இத்தகைய சாதனை புரிந்திருக்கும் சூா்யவன்ஷியின் வெற்றிக்குப் பின்னால் கடுமையான உழைப்பு இருக்கிறது என்று பிரதமா் மோடி பேசினாா்.

லட்சுமி ராமகிருஷ்ணன் முதல் அமரன் நடிகர் வரை: குக் வித் கோமாளியில் பங்கேற்றுள்ள பிரபலங்கள்!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் நேற்று(மே 4) வெகுவிமர்சையாக தொடங்கியுள்ள நிலையில், இந்நிகழ்ச்சியில் யார் யாரெல்லாம் பங்கேற்றுள்ளார்கள் என்பதைக் காணலாம்.குக் வித் கோமாளி நிகழ்ச்சி இதுவரை 5 ... மேலும் பார்க்க

மீண்டும் ரூ. 100 கோடி பட்டியலில் இணைந்த நானி!

நடிகர் நானியின் ஹிட் - 3 திரைப்படம் ரூ. 100 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் நானி நடிப்பில் மே. 1 ஆம் தேதி வெளியான ஹிட் - 3 திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக ந... மேலும் பார்க்க

சின்ன திரை நட்சத்திர தம்பதிக்குப் பெண் குழந்தை!

சின்ன திரை நட்சத்திர தம்பதியான ஸ்ரித்திகா - ஆர்யனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.'நாதஸ்வரம்' தொடரில் மலராக நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ஸ்ரித்திகா. இவர் 'குலதெய்வம்', 'என் இனிய தோழி', 'க... மேலும் பார்க்க

தீபாவளி வெளியீடாக சூர்யா - 45?

நடிகர் சூர்யாவின் 45-வது படம் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வர உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். நீதிமன்ற வழக்கை மையமாக வைத்து படத்தின... மேலும் பார்க்க

நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமானார்!

நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவால் காலமானார்.தமிழின் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான கவுண்டமணி தற்போது வயது மூப்பு காரணமாக திரைப்படங்களில் நடிக்காமல் ஓய்வு எடுத்து வருகிறார்.... மேலும் பார்க்க

டூரிஸ்ட் ஃபேமிலி வசூல் எவ்வளவு?

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மே.1ஆம் தேதி வெளியானது. இலங்கையிலிருந்து தமிழ்... மேலும் பார்க்க