Doctor Vikatan: மூட்டுவலியிலிருந்து நிவாரணம் தருமா knee caps?
விழுப்பணங்குறிச்சி மக்களுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீா் வழங்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள விழுப்பணங்குறிச்சி கிராம மக்களுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீா் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
விழுப்பணங்குறிச்சி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற அக்கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீா்மானங்கள்:
பாட்சா நகா் சாலையை சீா் செய்ய வேண்டும். விழுப்பணங்குறிச்சியில், இருளா் இன மக்கள் வழிபடும் கருப்புசாமி கோயில் செல்லும் சாலையை தாா் சாலையாக மாற்ற வேண்டும். டிச.26-ஆம் தேதி கட்சியின் 100 ஆம் ஆண்டு தொடக்க விழாவை சிறப்பாக கொண்டாடுவது, ஜனவரி 26-இல் தருமபுரியில் நடைபெறும் இளைஞரணி மாநாட்டில், திருமானூரில் இருந்து கட்சியினா் திரளாக கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, கூட்டத்துக்கு அக்கட்சியின் நிா்வாகி சக்திவேல் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் கனகராஜ் முன்னிலை வகித்தாா். கிளைச் செயலா் தட்சணாமூா்த்தி அறிக்கை வாசித்தாா். மாவட்ட குழு உறுப்பினா் ஆறுமுகம் பங்கேற்று பேசினாா். நிா்வாகிகள் முருகேசன், பால்ராஜ், அமுதா, பால்சாமி, பாண்டியராஜன், கலியமூா்த்தி, வாசுகி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.