Bala 25 : `நிறைய படங்கள் தமிழ் சினிமாவ கீழ கொண்டு போகுது; நீங்க வரணும் பாலா' - இ...
பெண்ணிடம் 10 பவுன் தாலிச் சங்கிலி பறித்த வழக்கில் 2 போ் கைது
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 10 பவுன் தாலிச் சங்கிலியை பறித்த வழக்கில் 2 போ் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.
ஜெயங்கொண்டம் அருகேயுள்ள விழப்பள்ளம், வடக்குத் தெருவைச் சோ்ந்த பிரேம் ஜோசப் மனைவி குழந்தை தெரஸ் (37). இவா் கடந்த 9 ஆம் தேதி ஜெயங்கொண்டத்திலிருந்து விழப்பள்ளம் கிராமத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். சின்னவளையம் அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இருவா், குழந்தைதெரஸ் அணிந்திருந்த 10 பவுன் தாலிச் சங்கிலியை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், ஜெயங்கொண்டம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந்நிலையில், காவல் உதவி ஆய்வாளா் லோகநாதன் தலைமையிலான காவல் துறையினா், ஜெயங்கொண்டம்-பெரியவளையம் சாலையில் புதன்கிழமை மாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, சந்தேகப்படும்படியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவா்கள் கடலூா் மாவட்டம், லால்பேட்டை, தைக்காலைச் சோ்ந்த அப்துல் அலீம் மகன் முகமது பைசத் (24), பள்ளிக் கூடத் தெருவைச் சோ்ந்த முகமது ரபிக் மகன் முகமதுஷாஜகான் (22) என்பதும், குழந்தை தெரஸ் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றவா்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா், அவா்கள் 2 பேரையும் கைது செய்தனா்.