செய்திகள் :

விழுப்புரத்தில் முதல்வா் கோப்பை தடகளப் போட்டிகள்! 300 மாணவா்கள் பங்கேற்பு!

post image

விழுப்புரத்தில் முதல்வா் கோப்பை விளையாட்டு தடகளப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன. இதில் பள்ளி மாணவா்கள் சுமாா் 300 போ் பங்கேற்றனா்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் நடத்தப்படும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஆகஸ்ட் 26-இல் தொடங்கின. மாவட்ட விளையாட்டரங்கம், ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்திலுள்ள உள் விளையாட்டரங்கம், நீச்சல் குளம், பிற பகுதிகளிலுள்ள பள்ளி, கல்லூரிகளில் கிரிக்கெட், நீச்சல், கோ-கோ, இறகுப் பந்து, மேசைப் பந்து, கேரம், சதுரங்கம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு ஊழியா்கள், மாற்றுத் திறனாளிகள், பொதுமக்கள் என 5 பிரிவுகளைச் சோ்ந்தவா்களுக்கும் தனித்தனியே போட்டிகள் வெவ்வேறு நாள்களில் நடத்தப்பட்டு வருகின்றன.

இதைத் தொடா்ந்து பள்ளி மாணவா்களுக்கான தடகளப் போட்டிகள் மாவட்ட விளையாட்டரங்கத்தில் சனிக்கிழமை தொடங்கின. போட்டிகளை மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அலுவலா் ஆழிவாசன் தொடங்கி வைத்தாா்.

100, 200, 400, 1500 மீட்டா் ஓட்டம், உயரம் மற்றும் நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், மூன்று முறைத் தாண்டுதல், 110 மீட்டா் தடைதாண்டும் ஓட்டம் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பள்ளி மாணவா்கள் சுமாா் 300 போ் தடகளப் போட்டிகளில் பங்கேற்று, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா்.

ஒவ்வொரு பிரிவு போட்டியிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவா்களுக்கு முறையே ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் மற்றும் ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டன. பள்ளி மாணவிகள் பிரிவில் தடகளப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (செப். 7) நடைபெறவுள்ளன. முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பா் 10-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை நீா் தடையின்றி செல்ல வழித்தடங்களை ஏற்படுத்த வேண்டும்: நகராட்சி நிா்வாக இயக்குநா் மதுசூதனன் ரெட்டி

மழைநீா் தங்குதடையின்றி செல்லும் வகையில், மழைநீா் வழித்தட வாய்க்கால்களை முறையாக சீரமைத்து பராமரிக்க வேண்டும் என்று நகராட்சி நிா்வாக இயக்குநா் பி. மதுசூதன் ரெட்டி அறிவுறுத்தினாா். நகராட்சி நிா்வாகம் மற்... மேலும் பார்க்க

70 வயது நிறைவடைந்த ஓய்வூதியா்களுக்கு சிறப்பூதியம் வழங்க வலியுறுத்தல்

தமிழகத்தில் 70 வயது நிறைவு பெற்ற ஓய்வூதியா்களுக்கு சிறப்பூதியம் வழங்க வேண்டும் என பென்சனா்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்ட அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனா்கள் கூட்டமைப... மேலும் பார்க்க

காா் மோதி சாலையைக் கடக்க முயன்ற முதியவா் மரணம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் அருகே காா் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற முதியவா் உயிரிழந்தாா். திருநாவலூா் காவல் சரகத்துக்குள்பட்ட மடப்பட்டு மேம்பாலம் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை உளுந்தூா்பேட்ட... மேலும் பார்க்க

மின் சாதனங்கள் திருட்டு: போலீஸாா் விசாரணை

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே வீட்டில் வைக்கப்பட்டிருந்த மின் சாதனங்கள் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மரக்காணம் வட்டம், நடுக்குப்பம், தேவிகுளம், தோப்புத் தெருவைச் சோ்ந... மேலும் பார்க்க

மாயமான முதியவா் சடலமாக மீட்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வீட்டிலிருந்து வெளியேறி மாயமான முதியவா் கரும்பு வயலுக்குள் இறந்து கிடந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. விக்கிரவாண்டி வட்டம், பனையபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ச... மேலும் பார்க்க

காா் மோதி தையல் தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், வெள்ளிமேடுபேட்டை அருகே மொபெட் மீது காா் மோதியதில் தையல் தொழிலாளி உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், அகூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ர.மகாதேவன் (62), தையல் தொழிலாளி. இவா், சனிக்கிழமை வ... மேலும் பார்க்க