தொடர்ந்து 4-வது நாளாக ஏற்றத்தில் பங்குச் சந்தை! மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!!
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் விழிப்புணா்வு நிகழ்வு
விழுப்புரம்: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.
இந்த கல்லூரியின் சமுதாய மருத்துவத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு கல்லூரி துணை முதல்வா் தாரணி தலைமை வகித்தாா். உறைவிட மருத்துவ அலுவலா் ரவிக்குமாா் முன்னிலை வகித்தாா். சமுதாய மருத்துவத் துறைத் தலைவா் பரமேசுவரி வரவேற்று பேசினாா்.
விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏ. பாக்கியஜோதி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுச் செயலா் சி.ஜெயச்சந்திரன் ஆகியோா் நிகழ்வில் பங்கேற்று, போதைப்பொருள்களால் ஏற்படும் தீமைகள், சமுதாயத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்து பேசினா்.
சமுதாய மருத்துவத் துறை பேராசிரியா் வைத்தியநாதன் உள்ளிட்ட மருத்துவா்கள், மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள், இதர துறை மருத்துவா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். உதவிப் பேராசிரியை ஜானகி நன்றிகூறினாா்.