செய்திகள் :

விழுப்புரம்: நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த கார்… மூன்று இளைஞர்கள் உயிரிழந்த பின்னணி என்ன?

post image

சென்னையைச் சேர்ந்த அஜீஸ் என்ற 25 வயது இளைஞர், பெங்களூருவில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

ஆயுத பூஜைக்காக விடப்பட்ட தொடர் விடுமுறையில் கேரளாவுக்குச் செல்ல முடிவெடுத்த அஜீஸ், சென்னையில் இருக்கும் தன்னுடைய நண்பர்கள் சம்சுதீன், தீபக், ரிஷி, மோகன்ராஜ் உள்ளிட்டவர்களையும் அழைத்திருக்கிறார்.

அதன்படி அக்டோபர் 3-ம் தேதி 5 பேரும் அதிகாலை 4.30 மணிக்கு காரில் சென்னையில் இருந்து மூணாறு நோக்கிப் புறப்பட்டனர். காரை அஜீஸ் ஓட்டிக் கொண்டிருந்தார்.

விழுப்புரம் விபத்தில் தீப்பிடித்து எரிந்த கார்

சுமார் 6.40 மணிக்கு சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் இருந்த தடுப்புக்கட்டையில் மோதியது.

அதையடுத்து சுமார் 50 மீட்டர் தூரம் வரை சாலையில் தறிகெட்டு ஓடிய கார், எதிரில் சென்றுகொண்டிருந்த லாரியின் பின்னால் மோதி அப்பளமாக நொறுங்கியது.

அதே நேரத்தில் காரின் பின்பக்கத்தில் திடீரென தீப்பபற்றி எரிய ஆரம்பித்தது. அந்த சத்தத்தைக் கேட்டு ஓடிய அப்பகுதி மக்கள், காருக்குள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அஜீஸ், தீபக் இருவரையும் மீட்டனர்.

தொடர்ந்து தங்கள் உயிரைப் பொருட்படுத்தாத அப்பகுதி மக்கள், கார் எரிந்து கொண்டிருந்தபோதும் சம்சுதீன், ரிஷி, மோகன்ராஜ் உள்ளிட்ட மூன்று பேரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

ஆனால் அவர்கள் மூவரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டிருந்தனர். தொடர்ந்து அஜீஸ், தீபக் இருவரையும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர்.

அதேபோல சம்சுதீன், ரிஷி, மோகன்ராஜ் மூவரின் சடலங்களை மீட்ட போலீஸார், உடற்கூராய்வு சோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள்

இந்த சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய விக்கிரவாண்டி போலீஸார், ``எங்கள் முதல் கட்ட விசாரணையில், காரின் இடதுபுறத்தில் இருந்த பின்புற டயர் வெடித்ததால் விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதில் நிலை தடுமாறிய கார் சாலையில் தறிகெட்டு ஓடியிருக்கிறது.

அப்போது பெட்ரோல் இருந்த பகுதியும் சேதமானதால், டயரில் பிடித்த தீ காருக்குள்ளும் மளமளவெனெ பரவியது. அதையடுத்து சில நிமிடங்களில் கார் முழுவதுமான எரிந்துவிட்டது. ஆனால் உயிரிழந்த மூவரும் தீயில் கருகியதால் இறக்கவில்லை.

அதற்கு முன்பே ஏற்பட்ட விபத்திலேயே உயிரிழந்திருக்கின்றனர். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அஜீஸ், தீபக் இருவரிடமும் விசாரணை செய்தபிறகே, விபத்துக்கான முழு காரணமும் தெரிய வரும்” என்றனர்.

Ennore: சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் விபத்து; வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் பலி

சென்னை அருகே இருக்கும் எண்ணூர் அனல் மின் நிலையத்தில் கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்த செய்தி சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அனல் மின் நிலையத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரு... மேலும் பார்க்க

கரூர்: ``நிபந்தனையை மீறி செயல்பட்டார் விஜய்'' - காவல்துறையின் FIR சொல்வது என்ன?

கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் பரப்புரைதவெக தலைவர் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் எழுந்தி... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசல்: 41 பேர் பலி, கதறி அழுத உறவுகள்; நெஞ்சை உலுக்கிய சோகக் காட்சிகள்

கரூர் கூட்ட நெரிசல் சோகக் காட்சிகள்கரூர் கூட்ட நெரிசல் 41 பேர் பலிகரூர் கூட்ட நெரிசல் சோகக் காட்சிகள்கரூர் கூட்ட நெரிசல் சோகக் காட்சிகள்கரூர் கூட்ட நெரிசல் சோகக் காட்சிகள்கரூர் கூட்ட நெரிசல் சோகக் காட... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் சரணாலயம் வனப்பகுதியில் 3 வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் சரணாலயத்தில் காட்டுத்தீ 3 வது நாளாக எரிந்து வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் சாம்பல் நில அணில்கள் சரணாலயம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர்-... மேலும் பார்க்க

மும்பை: கடல் சுரங்கப்பாதையில் தீப்பிடித்து எரிந்த கார்; புகை மண்டலத்தால் ஸ்தம்பித்த போக்குவரத்து

மும்பையின் மேற்கு பகுதியை தென்பகுதியோடு இணைக்கும் விதமாக கடற்கரையொட்டி சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலை கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் போக்குவரத்திற்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இச்சாலையில் கடலி... மேலும் பார்க்க

சென்னை: பிரபல மாலில் லிஃப்ட் விபத்து; உடல் நசுங்கி ஊழியர் பலி - அதிர்ச்சி சம்பவம்

சென்னையில் உள்ள பிரபல வணிக வளாகமான எக்ஸ்பிரஸ் அவென்யூவின் லிஃப்டில் சிக்கி ஊழியர் ஒருவர் இன்று உயிரிழந்திருக்கிறார். ஊழியரின் பாதுகாப்பை உறுதி செய்வதில் நிர்வாகம் அலட்சியம் காட்டியதாக குற்றச்சாட்டு எழ... மேலும் பார்க்க