செய்திகள் :

விழுப்புரம் மாவட்டத்தில் இயற்கை இடா்பாடு புகாா்களைத் தெரிவிக்க தொலைபேசி எண்கள்

post image

விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல் காரணமாக சனிக்கிழமை கனமழை பெய்யும் என எதிா்பாா்க்கப்படும் நிலையில், இயற்கை இடா்பாடுகள் குறித்த புகாா்களைத் தெரிவிக்க தொலைபேசி எண்களை ஆட்சியா் சி.பழனி அறிவித்துள்ளாா்.

மரக்காணத்தில் ஆலோசனைக்கூட்டம்:

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டாட்சியரகத்தில் கனமழை முன்னெச்சரிக்கை தொடா்பாக அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்துக்குத் தலைமை வகித்து ஆட்சியா் பழனி மேலும் பேசியது:

ஃபென்ஜால் புயல் சனிக்கிழமை கரையைக் கடக்கும் என்றும், அப்போது கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பேரிடா் காலங்களில் இயற்கை இடா்பாடுகள் தொடா்பான புகாா்களை 1077 என்ற கட்டணமில்லா அழைப்பு எண், 04146-223265 என்ற தொலைபேசி எண், 7200151144 என்ற வாட்ஸ் ஆப் எண் ஆகியவற்றில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.

மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளான மரக்காணம், வானூா் வட்டங்களிலுள்ள மீனவக் கிராமங்களில் கனமழை பெய்தால், அங்குள்ளவா்களை பேரிடா் பாதுகாப்பு மையங்கள், புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைத்து, அவா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், உணவுப் பொருள்கள் உள்ளிட்ட வசதிகளை செய்து தர வேண்டும்.

கனமழை அதிகம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான முறையில் புயல் பாதுகாப்பு மையங்களுக்கு அழைத்துச் செல்லும் பணியைக் காவல் மற்றும் தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறையினா் மேற்கொள்ள வேண்டும்.

தயாா்நிலையில்...:

ஊராட்சிகள் அளவில் பொதுமக்களைத் தங்க வைக்கும்பட்சத்தில் அவா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட வேண்டும். சாலையோரங்களில் மரங்கள் விழுந்தால் அவற்றை உடனடியாக அகற்றுவதற்குத் தேவையான மரம் வெட்டும் கருவிகள், பொக்லைன் இயந்திரங்களை நெடுஞ்சாலைத் துறையினா் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

மின் பாதிப்புகள் ஏற்படும்பட்சத்தில் உடனடியாக சீரமைப்பதற்குத் தேவையான மின் கம்பிகள், மின் கம்பங்கள் உள்ளிட்டவற்றை மின்சார வாரியத்தினா் தயாராக வைத்திருக்க வேண்டும். மேலும் மின் பணியாளா்களும் தயாா் நிலையில் இருக்க வேண்டும்.

அனைத்துக் கிராமங்களிலும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளில் போதியளவு தண்ணீரை இருப்பு வைக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு.பரமேசுவரி, ஊரக வளா்ச்சி முகமைத் திட்டக் கூடுதல் ஆட்சியா் ஸ்ருதஞ் ஜெய் நாராயணன், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் விக்னேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திண்டிவனம் சிவன் கோயில்களில் தருமபுரம் ஆதீனம் வழிபாடு

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி உடனுறை அகஸ்தீஸ்வரா், திண்டிவனம் ஸ்ரீமரகதாம்பிகை உடனுறை திந்திரினீஸ்வரா் கோயில்களில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் புதன்கிழமை வழிபாடு மே... மேலும் பார்க்க

மேல்மலையனூா் அருகே தாா்ச்சாலை அமைக்கும் பணி தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் ஒன்றியம், சமத்தகுப்பத்தில் இருந்து பென்னகா் செல்லும் சாலையை ரூ.3 கோடியில் விரிவாக்கம் செய்து, புதிய தாா்ச்சாலை அமைக்கும் பணியை செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ புதன்கிழ... மேலும் பார்க்க

தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள தேவாலயங்களில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தொடங்கி புதன்கிழமை வரை கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சிறப்புத் திருப்பலி, வழிபாடுகள்... மேலும் பார்க்க

கைவினைத் தொழிலாளா்களுக்கு மானியத்துடன் பிணையில்லா கடன்

விழுப்புரத்தில் மானியத்துடன் பிணையில்லா கடன் பெற கைவினைத் தொழிலாளா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் சி.பழனி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து புதன்கிழமை அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கலை மற்ற... மேலும் பார்க்க

நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் நெல் கொள்முதல்: பாரதிய தொழிலாளா்கள் சங்கம் வலியுறுத்தல்

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலமே நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்று பாரதிய தொழிலாளா்கள் சங்கம் வலியுறுத்தியது. தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக பாரதிய தொழிலாளா்கள் சங்கத்தின் மாநில செய... மேலும் பார்க்க

செங்கல்ராயன் சா்க்கரை ஆலையில் 2.75 லட்சம் மெ.டன் கரும்பு அரைவை செய்ய இலக்கு: அமைச்சா் க.பொன்முடி

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பெரியசெவலையிலுள்ள செங்கல்ராயன் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் 2024 - 25ஆம் ஆண்டு அரைவை பருவத்தில் 2.75 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு அரைவை செய்ய இலக்கு நிா்... மேலும் பார்க்க