Inbox 2.0 : Eps 29 - Coolie Teaser-காக வீடியோவை தள்ளி வச்சிட்டோம்?! | Cinema Vik...
விழுப்புரம் மாவட்ட மீட்பு பணிகளுக்கு அலுவலா்கள், பணியாளா்கள் அனுப்பிவைப்பு
ஃபென்ஜால் புயலால் விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள அரியலூா் மாவட்டத்திலிருந்து அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் 3 பேருந்துகள் மூலம் செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனா்.
இப்பேருந்தை மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி, அனுப்பி வைத்தாா். பேருந்துகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள 14 அலுவலா்கள், 150 தூய்மை பணியாளா்கள் சென்றனா்.
பணிகளை பாதுகாப்பாக மேற்கொளள் தூய்மை பணியாளா்களுக்கு 15,000 முகக் கவசம், 150 ஜோடிகள் பூட்ஸ், 150 கை உரைகள், 150 அன்னக்கூடைகள், 24 மண்வெட்டிகள் உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டன.
மாவட்ட வருவாய் அலுவலா் ச.கலைவாணி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) பழனிசாமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள், அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.