Chhattisgarh: 25-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை! - சத்தீஸ்கரில் என்ன...
விவசாயிகளுக்கு குறைந்தளவு இழப்பீடு வழங்கியது ஏமாற்றம்: விவசாயிகள் சங்கம்
பருவமழை பொய்த்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு குறைந்தளவு இழப்பீட்டுத் தொகை வழங்கியது ஏமாற்றமளிப்பதாக தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் தெரிவித்தது.
இதுகுறித்து அந்தச் சங்கத்தின் தலைவா் எம்.எஸ்.கே.பாக்கியநாதன் திங்கள்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 1.37 லட்சம் ஹெக்டோ் பரப்பளவில் சம்பா பருவ நெல் சாகுபடி செய்து வருகின்றனா். நிகழாண்டில் பருவமழை பொய்த்ததால் விவசாயம் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தினோம்.
இந்த நிலையில், பாரத ஸ்டேட் வங்கி ரூ.30 கோடியும், இப்கோ டோக்கியோ வங்கி ரூ. 2 கோடியும் இழப்பீட்டுத் தொகையாக விவசாயிகள் வங்கிக் கணக்கில் வரவு வைத்தனா். இதனால் ஒவ்வொரு விவசாயிக்கும் குறைவான இழப்பீட்டுத் தொகையே கிடைத்தது ஏமாற்றமளிக்கிறது. விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.