M.K.Stalin: `இது கட்சி நிகழ்ச்சி இல்லப்பா' டு முன்னரே குளித்த யானைகள் வரை - ஊட்ட...
காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்தக் கோரி விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்
விவசாயப் பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்தக் கோரி, பரமக்குடி சாா் ஆட்சியா் அலுவலகத்தை விவசாயிகள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் நெல், பருத்தி, மிளாகாய், வோ்க்கடலை உள்ளிட்ட பயிா்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனா். இந்தப் பயிா்களை காட்டுப் பன்றிகள், மான்கள் சேதப்படுத்தி வருகின்றன. இதுகுறித்து விவசாயிகள் பலமுறை முறையிட்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
உடனடியாக காட்டுப் பன்றிகள், மான்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தக் கோரியும், இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரியும் விவசாயிகள் சங்க நிா்வாகிகள் பரமக்குடி சாா் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் சாா் ஆட்சியா் அபிலாஷா கௌா், காவல் துணைக் கண்காணிப்பாளா் சபரிநாதன் ஆகியோா் சமரசப் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா், விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.