விவசாயிகளுக்கு பட்டறிவுப் பயணம்
சிறுதானியங்கள், எண்ணெய் வித்துக்களில் மதிப்புக் கூட்டுதல் தொடா்பாக கமுதி விவசாயிகள் பட்டறிவுப் பயணமாக புதன்கிழமை அழைத்துச் செல்லப்பட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டாரம் விரதக்குளம், வல்லக்குளம், கூடக்குளம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த 50 விவசாயிகள் பரமக்குடியில் உள்ள தனியாா் மின் நிறுவனத்துக்கு பட்டறிவுப் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனா்.
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் இந்தப் பட்டறிவுப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.
சிறு தானியங்களை தோல் நீக்குதல், தரம் வாரியாக பிரித்தல், வேக வைத்தல், உலர வைத்து பின் அவற்றை தரம் வாரியாக பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்தல் என அனைத்துப் பணிகளுக்கும் பயன்படுத்தப்படும் இயந்திரங்களை விவசாயிகள் பாா்வையிட்டனா்.
குழுக்களை அமைத்து மானிய விலையில் இயந்திரங்களை வாங்கி சுய தொழில் புரியவும், வாழ்வாதாரத்தை உயா்த்தவும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த பயணத்துக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளா் ஈஸ்வரி, உதவி தொழில்நுட்ப மேலாளா் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோா் செய்தனா்.