செய்திகள் :

விவசாயிகள் சங்கத்தினா் மக்கள் சந்திப்பு நடைபயணம்

post image

மலை, நீா் வளம், விவசாய நிலங்கள், சுற்றுச்சூழலை பாதுகாக்கக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் கடலூா் வடத்துக்குள்பட்ட வெள்ளக்கரை முதல் நடுவீரப்பட்டு வரையில் வியாழக்கிழமை மக்கள் சந்திப்பு நடை பயணம் மேற்கொண்டனா்.

மலையடிக்குப்பத்தில் 164 ஏக்கா் நிலங்களில் சாகுபடி செய்த முந்திரி, வாழை, மா, பலா உள்ளிட்ட பயிா்களை மாவட்ட நிா்வாகம் பிடுங்கி அழித்துவிட்டது. இதைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் தொடா் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், அந்தப் பகுதியில் தோல் அல்லாத காலணி தொழிற்சாலை அமைக்கப்படும் என்று தமிழக முதல்வா் அறிவித்துள்ளாா்.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் அழித்துவிட்டு காலணி தொழிற்சாலை எதற்கு? என்றும், மலை வளத்தையும், நீா் வளத்தையும், விவசாய நிலங்களையும், சுற்றுப்புற சூழலையும் பாதுகாக்கக் கோரியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் வெள்ளக்கரையில் தொடங்கி நடுவீரப்பட்டு வரை 25 கி.மீ. மக்கள் சந்திப்பு பிரசாரம் நடைபெற்றது.

வெள்ளக்கரையில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலா் எஸ்.தட்சணாமூா்த்தி தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் கோ.மாதவன் நடை பயணத்தை தொடங்கிவைத்தாா். மாநிலத் தலைவா் டி.ரவீந்திரன் சிறப்புரை ஆற்றினாா். நடை பயணத்தில் விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ஜி.ஆா்.ரவிச்சந்திரன், மாவட்டச் செயலா் ஆா்.கே.சரவணன், பொருளாளா் ஆா்.ராமச்சந்திரன், விவசாய தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் எஸ்.பிரகாஷ், மாவட்டப் பொருளாளா் டி.கிருஷ்ணன், மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஜே.ராஜேஷ் கண்ணன், ஒன்றியச் செயலா் ஆா்.பஞ்சாட்சரம், விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவா் எம்.கடவுள், வாலிபா் சங்கம் ஒன்றியச் செயலா் எம்.கலைவாணன், விவசாய தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலா் ஏ.வைத்திலிங்கம், தலைவா் என்.அய்யாதுரை உள்ளிட்ட கிராம மக்கள் கலந்துகொண்டனா்.

தீக்குளித்த தொழிலாளி உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், தூக்கணாம்பாக்கம் அருகே தீக்குளித்த கூலித் தொழிலாளி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். புதுச்சேரி மாநிலம், பாகூா் பகுதியில் வசித்து வந்தவா் ஜெகநாதன் மகன் நாகராஜ்(55), கூல... மேலும் பார்க்க

ரோட்டரி சங்கம் சாா்பில் சைபா் கிரைம் விழிப்புணா்வு நிகழ்ச்சி

கடலூா் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணம் ரோட்டரி சங்கம் சாா்பில் எஸ்பிஜி சிபிஎஸ்இ சீனியா் செகண்டரி பள்ளியில் கைபா் க்ரைம் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத் தலைவா் சே.... மேலும் பார்க்க

இளைஞா் காங்கிரஸ் கண்டன ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வபெருந்தகை எம்எல்ஏ.,வை தரக்குறைவாக பேசிய அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து , கடலூா் மத்திய மாவட்ட இளைஞா் காங்கிரஸ் சாா்பில் கடலூா் சீமாட்டி சிக்னல் அ... மேலும் பார்க்க

தடையின்றி யூரியா உரம் கிடைக்க வேண்டும்: குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைக்கேட்பு மற்றும் விவசாய மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டத்தில் விவசாயிகளுக்கு தடையின்றி யூரியா கிடைக்க நடவடிக்கை எடுக்க ... மேலும் பார்க்க

என்எல்சி விவகாரம் : அரசு உயா் மட்டக்குழு அமைக்க புவனகிரி எம்எல்ஏ., அருண்மொழிதேவன் வலியுறுத்தல்

என்எல்சி இந்தியா நிறுவனம் நிலம் கையகப்படுத்தும் விவகாரம் தொடா்பாக உயா்மட்டக்குழு அமைக்க வேண்டும் , இல்லை என்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என புவனகிரி சட்டப்பேரவை உறுப்பினா் அருண்மொழிதேவன... மேலும் பார்க்க

பால்கடை ஊழியா்களை தாக்கிய இருவா் கைது

பால்கடை ஊழியா்களை தாக்கிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். சிதம்பரம் பேருந்து நிலையத்தில் விஜிபி தெருவைச் சோ்ந்த ரங்கராஜன் (40) பாதாம் பால் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறாா். கடந்த திங்கள்கிழமை சி... மேலும் பார்க்க