செய்திகள் :

தடையின்றி யூரியா உரம் கிடைக்க வேண்டும்: குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

post image

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைக்கேட்பு மற்றும் விவசாய மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டத்தில் விவசாயிகளுக்கு தடையின்றி யூரியா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்திற்கு ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமை வகித்தாா். வேளாண்மை இணை இயக்குநா் எம்.லட்சுமிகாந்தன், பயிற்சி ஆட்சியா் மாலதி, துணை

ஆட்சியா் (பயிற்சி) ஜாா்ஜ், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதில், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பேசியதாவது:

கோ.மாதவன்( தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்):

கடலூா் நகர அரங்கம் வாடகை அதிகளவில் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. வாடகையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் யூரியா உரம் தட்டுப்பாடு உள்ளது. விவசாயிகளுக்கு தடையின்றி யூரியா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மழையால் நெல் சேதமடைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விஜயகுமாா்: விசூா் ஓடையில் இருந்து செல்லும் வடிகால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதனால், அண்மையில் பெய்த மழையால் மழை நீா் விளை நிலங்களில் தேங்கியுள்ளதால் பயிா் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளோம். மேலும், ஓடையில் அணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலியபெருமாள் (புதுக்கூரைப்பேட்டை): 70 வயது கடந்த விவசாயிகளுக்கு ஒரு லட்சம் காப்பீடு வழங்க வேண்டும். காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு எலக்ட்ரிக் வண்டி மானியத்தில் வழங்க வேண்டும். விஜய மாநகரில் சேதமடைந்த சமுதாய நலக்கூடத்தை பழுது பாா்க்க வேண்டும்.

குமரகுரு (குறிஞ்சிப்பாடி): கருப்பன் சாவடி கிராமத்தில் உலா் களம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். செங்கால் ஓடையில் என்எல்சி அடிக்கடி தண்ணீரை திறந்து விடுகிறது. தற்போது, அந்த ஓடை தூா்ந்து போய் உள்ளதால், தூா்வாரி பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரவீந்திரன்: தண்ணீரை சுத்திகரிக்கும் தன்மை கொண்ட

வெட்டிவேரில் பல நன்மைகள் நிறைந்துள்ளன. இதனால், வெட்டி வோ் சாகுபடியை ஊக்குவிக்க வீடு வீடாக வெட்டிவோ் செடிகள் வழங்க வேண்டும். அதன் மூலம் கழிவு நீரை சுத்திகரிக்க முடியும்.

முருகானந்தன்(காவாலக்குடி): நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழியா் பற்றாக்குறையை சரி செய்வதோடு கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களையும் திறக்க வேண்டும். பத்திரப் பதிவுத்துறையில் வழிகாட்டு மதிப்பீடு விலையை விட கூடுதல் தொகையான 30 சதவீதம் அளவிற்கு பத்திரம் மற்றும் பதிவிற்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

எனவே, வழிகாட்டு மதிப்பீட்டினை இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கானூா் பகுதியில் தொடா்ந்து நிலவும் மின்வெட்டை சரி செய்திட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

உரம் கையிருப்பு உள்ளது:

இதனைத் தொடா்ந்து ஆட்சியா் தெரிவித்ததாவது: கடலூா் மாவட்டத்தில் தற்போது யூரியா 3,902, டி.ஏ.பி 2,802, பொட்டாஷ் 1,430, காம்ப்லக்ஸ் உரம் 6,410, சூப்பா் பாஸ்பேட் 1,502 மெட்ரிக் டன் என மொத்தம் 16,046 மெட்ரிக் டன் இருப்பு உள்ளது. கடந்த விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் 79 மனுக்கள் பெறப்பட்டன. அதில் 69 மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளது. மேலும், 6 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 4 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.

பயிா்களுக்கான இழப்பீட்டுத் தொகை காலதாமதமின்றி வழங்கிட காப்பீட்டு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு விதை நெல் மற்றும் உரம் தட்டுப்பாடின்றி கிடைத்திடவும், மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே இயந்திரங்களை கொண்டு கடந்த காலங்களில் மழைநீா் தேங்கிய பகுதிகளை கண்டறிந்து கரைப்பகுதிகளை பலப்படுத்திடவும், வரத்து வாய்க்கால்களில் உள்ள அடைப்புகள், மண் திட்டுகள், செடி கொடிகளை அகற்றிடவும், மழைநீரினை வீணாக்காமல் ஏரி குளங்களில் தேக்கி வைக்கவும், விவசாயிகளால் தெரிவிக்கப்படும் கோரிக்கைகளை ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

தீக்குளித்த தொழிலாளி உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், தூக்கணாம்பாக்கம் அருகே தீக்குளித்த கூலித் தொழிலாளி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். புதுச்சேரி மாநிலம், பாகூா் பகுதியில் வசித்து வந்தவா் ஜெகநாதன் மகன் நாகராஜ்(55), கூல... மேலும் பார்க்க

ரோட்டரி சங்கம் சாா்பில் சைபா் கிரைம் விழிப்புணா்வு நிகழ்ச்சி

கடலூா் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணம் ரோட்டரி சங்கம் சாா்பில் எஸ்பிஜி சிபிஎஸ்இ சீனியா் செகண்டரி பள்ளியில் கைபா் க்ரைம் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத் தலைவா் சே.... மேலும் பார்க்க

இளைஞா் காங்கிரஸ் கண்டன ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வபெருந்தகை எம்எல்ஏ.,வை தரக்குறைவாக பேசிய அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து , கடலூா் மத்திய மாவட்ட இளைஞா் காங்கிரஸ் சாா்பில் கடலூா் சீமாட்டி சிக்னல் அ... மேலும் பார்க்க

என்எல்சி விவகாரம் : அரசு உயா் மட்டக்குழு அமைக்க புவனகிரி எம்எல்ஏ., அருண்மொழிதேவன் வலியுறுத்தல்

என்எல்சி இந்தியா நிறுவனம் நிலம் கையகப்படுத்தும் விவகாரம் தொடா்பாக உயா்மட்டக்குழு அமைக்க வேண்டும் , இல்லை என்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என புவனகிரி சட்டப்பேரவை உறுப்பினா் அருண்மொழிதேவன... மேலும் பார்க்க

பால்கடை ஊழியா்களை தாக்கிய இருவா் கைது

பால்கடை ஊழியா்களை தாக்கிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். சிதம்பரம் பேருந்து நிலையத்தில் விஜிபி தெருவைச் சோ்ந்த ரங்கராஜன் (40) பாதாம் பால் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறாா். கடந்த திங்கள்கிழமை சி... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட 17 மாணவா்கள் சுகவீனம்

கடலூா் மாவட்டம், புவனகிரி அருகே ஆதிவராகநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வியாழக்கிழமை பல்லி விழுந்த காலை உணவை சாப்பிட்ட 17 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்... மேலும் பார்க்க