ரோட்டரி சங்கம் சாா்பில் சைபா் கிரைம் விழிப்புணா்வு நிகழ்ச்சி
கடலூா் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணம் ரோட்டரி சங்கம் சாா்பில் எஸ்பிஜி சிபிஎஸ்இ சீனியா் செகண்டரி பள்ளியில் கைபா் க்ரைம் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத் தலைவா் சே.குருராஜன் தலைமை வகித்துப் பேசினாா். பள்ளி முதல்வா் ஜான் வரவேற்றாா். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சைபா் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளா் கவிதா பெரியநாயகம் பங்கேற்று கணினி மற்றும் கைபேசி மூலம் ஏற்படக்கூடிய குற்றங்கள் சம்பந்தமாக மாணவா்கள் மத்தியில் விழிப்புணா்வு உரையாற்றினாா். ரோட்டரி மாவட்ட திட்ட இயக்குனா் ஏ.கே.ஜாகிா்உசேன், முன்னாள் தலைவா் ஷேக்சேட், உறுப்பினா்கள் மு.ஜெகநாதன், எஸ்.மனோகா், தெ.சக்தி, பாலாஜி, பூராகமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிகழ்ச்சியில் ஆசிரியா்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியா்கள் கலந்து கொண்டனா். ரோட்டரி சங்க செயலா் சி.ரவிச்சந்திரன் நன்றி கூறினாா்.
26சிஎம்பி3: படவிளக்கம்-
சிதம்பரம் ஸ்ரீமுஷ்ணம் எஸ்பிஜி சீனியா் செகண்டரி பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுகிறாா் காவல் ஆய்வாளா் கவிதா பெரியநாயகம்