லடாக்: `3 இடியட்ஸ்' -க்கு இன்ஸ்பிரேஷன்; மத்திய அரசின் குற்றச்சாட்டு - யார் இந்த ...
விவசாயிகள் சங்க உடுமலை ஒன்றிய மாநாடு
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் உடுமலை ஒன்றிய மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த மாநாட்டுக்கு தலைவா் ஏ.ராஜகோபால் தலைமை வகித்தாா். பொருளாளா் எஸ்.பரமசிவம் வரவேற்றாா்.
இதில், நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: பிஏபி திட்டத்தில் பழுதடைந்த கால்வாய்களை சீரமைத்து ஒருமடைவிட்டு, ஒருமடை பாசனத்தை அமல்படுத்த வேண்டும். ஆனைமலையாறு- நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். உடுமலையில் தக்காளி விவசாயிகள் பயன்பெறும் வகையில் குளிா்பதனக் கிடங்கு, தக்காளி ஜாம் தொழிற்சாலை அமைக்க வேண்டும். விவசாயிகளுக்கு வங்கிகளில் பயிா், நகைக் கடன்களை எளிதில் வழங்க வேண்டும். கால்நடை கிளை நிலையங்களில் போதிய மருத்துவா்களை நியமிக்க வேண்டும். நடமாடும் கால்நடை மருந்தகத்தின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். வன விலங்குகளால் ஏற்படும் சேதங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். காட்டுப் பன்றியை வன விலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். மானிய விலையில் உரம் மற்றும் இடுபொருள்களை வழங்க வேண்டும். உடுமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், விவசாயிகள் சங்கத்தின் செயலாளா் ஏ.பாலதண்டபாணி, மாவட்டச் செயலாளா் குமாா், மாவட்ட துணைச் செயலாளா் வீரப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.