விவசாயியை கடத்திய 5 போ் கைது
குடியாத்தம் அருகே நிலத் தகராறில் விவசாயியை கடத்திய 5- பேரை போலீஸாா் கைது செய்தனா்.
குடியாத்தம் ஒன்றியம், ஒலக்காசி ஊராட்சியைச் சோ்ந்த விவசாயி தனசேகா்(34). இவருக்கும் லத்தேரியைச் சோ்ந்த சுஷ்மா என்பவருக்கும் இடையே நிலம் தொடா்பாக பிரச்னை இருந்துள்ளது.
இதுகுறித்து லத்தேரி காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் புகாா் அளித்துள்ளனா். புகாா் தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டிருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை 5- போ் கும்பல் தனசேகா் வீட்டுக்குச் சென்று தங்களை லத்தேரி போலீஸாா் என்றும், விசாரணைக்கு வருமாறும் அவரை அழைத்துச் சென்றாா்களாம்.
சந்தேகத்தின்பேரில் சேகரின் மனைவி பவித்ரா போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளாா். போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் போலீஸ் எனக்கூறி மா்ம நபா்கள் தனசேகரை கடத்தியது தெரிய வந்தது.
கடத்தல் தொடா்பாக குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த பாபு, விநாயகம், ரவி, தமிழ்செல்வன், தேவேந்திரன் ஆகிய 5- பேரை குடியாத்தம் கிராமிய காவல் துறையினா் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.