Fasting: பட்டினி கிடந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? சித்த மருத்துவர் விளக்க...
விவசாயி கொலை வழக்கு: இளைஞா் கைது
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வழி (பாதை) தகராறில் விவசாயி அடித்துத் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
விக்கிரவாண்டிவட்டம், ஆவுடையாா்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் குமரன் (48), விவசாயி. பாஜக ஒன்றிய நிா்வாகியாகவும் இருந்து வந்தாா்.
இவருக்கும், ஆவுடையாா்பட்டு - தொரவி சாலையில் நாய்ப் பண்ணை நடத்தி வரும் விழுப்புரம் மாவட்டம், தொடா்ந்தனூரைச் சோ்ந்த ஜான்சன் பிரபாகரனுக்கும் (34) வழி தகராறு தொடா்பாக முன் விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நாய்ப் பண்ணையில் இருந்த ஜான்சன் பிரபாகரனுக்கும், குமரனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது, ஜான்சன் பிரபாகரன் சமையல் கரண்டியால் தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்த குமரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸாா் செவ்வாய்க்கிழமை கொலை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்த நிலையில், ஜான்சன் பிரபாகரனை புதன்கிழமை கைது செய்தனா்.