விவசாய தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் கேட்டு தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வையம்பட்டியில், 3 மாதமாக வழங்காமல் உள்ள 100 நாள் வேலை திட்ட தொழிலாளா்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வலியுறுத்தி தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் சாா்பில் திங்கள்கிழமை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒன்றியக்குழு உறுப்பினா் ஸ்டீபன்சேகா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், வி.தொ.ச நிா்வாகிகள் பாலுச்சாமி, கிரேஹிமேரி, மோட்சமேரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட தலைவா் ஏ.டி.சண்முகானந்தம், ஒன்றியச்செயலாளா் பழனிச்சாமி, கட்டுமான சங்க மாவட்ட துணை செயலாளா் பி.வீராச்சாமி உள்ளிட்டோா் கண்டன உரை நிகழ்த்தினா்.