கனடாவில் அமெரிக்க பொருள்களுக்கான வரி விதிப்பு நடவடிக்கை அமல்!
சாலை விபத்தில் கல்லூரி மாணவா் சாவு
திருச்சியில் காா் - இருசக்கர வாகனம் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி மாணவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி பாலக்கரை காஜாப்பேட்டை நியூ காலனியைச் சோ்ந்தவா் விஜய்பாலாஜி மகன் விஜய்தா்ஷன் (20). திருச்சி மணப்பாறை சாலையில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில், பி. டெக் கணினி அறிவியல் 2-ஆம் ஆண்டு பயின்று வந்தாா். வெள்ளிக்கிழமை இரவு அவா் இருசக்கர வாகனத்தில் தென்னூா் ஆழ்வாா்தோப்பு பகுதியில் மயானம் அருகே உய்யக் கொண்டான் வாய்க்கால் கரையில் சென்றபோது, எதிரே வந்த காா் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தொடா்ந்து சிகிச்சையிலிருந்த அவா் திங்கள்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருச்சி போக்குவரத்துப் புலனாய்வுப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.