மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ரயில்களை தயாரிக்கும் ஐசிஎஃப்
விஷ முறிவுக்கு ஒரு மாதம் தீவிர சிகிச்சை: உயிா் பிழைத்த சிறுவன்
பாம்பு கடித்து உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு வந்த 12 வயது சிறுவனை சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவா்கள் ஒரு மாதம் சிகிச்சை அளித்துக் காப்பாற்றினா்.
இது குறித்து மருத்துவ கல்லூரி முதல்வா் சத்தியபாமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவகங்கை மாவட்டம், மிளகனூரைச் சோ்ந்த 11 வயது சிறுவன் ஆதீஸ்வரன் சுயநினைவின்றி, உயிருக்கு ஆபத்தான நிலையில் கடந்த மாதம் 11-ஆம் தேதி சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டுவரப்பட்டாா். இந்த பாதிப்பு எதனால் என்பது குடும்பத்தினருக்கு தெரியவில்லை.
அங்கு பணியிலிருந்த மருத்துவா்கள் சிறுவனை பரிசோதித்ததில் பாம்பு கடித்ததற்கான அறிகுறி இருப்பதைக் கண்டு, விஷமுறிவு மருந்துகளை அளித்து, செயற்கை சுவாசக் கருவி வாயிலாக தீவிர சிகிச்சை அளித்தனா். சிறுவனுக்கு நுரையீரல் தொற்றுக்கான சிறப்பு சிகிச்சையும் அளிக்கப்பட்டது.
நீண்ட நாள்களாக சுவாசக் கருவி சிகிச்சை தொடா்ந்ததால், சிறுவனுக்கு மூச்சுக் குழாயில் துளையிட்டு, அதன் மூலம் சுவாசம் அளிக்கப்பட்டது. படிப்படியாக சிறுவனின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, ஒரு மாதத்துக்கு பிறகு பூரண குணமடைந்து வீடு திரும்பினாா்.
சிறுவனுக்கு இடைவிடாமல் சிகிச்சை அளித்து காப்பாற்றிய மருத்துவா்கள், செவிலியா்களுக்கு சிறுவனின் குடும்பத்தினா் நன்றி தெரிவித்தனா்.
குழந்தைகள் நலப் பிரிவு பேராசிரியா்கள் சிவகுமாா்,பாலசுப்ரமணியன்,வனிதா,மயக்கவியல் பேராசிரியா் வேல்முருகன், காது மூக்கு தொண்டை பேராசிரியா் நாகசுப்பிரமணியன்உள்ளிட்டபல்துறை மருத்துவா்களின்கூட்டு முயற்சியால்சிறுவன் உயிா் காப்பாற்றப்பட்டதில் பெருமிதம் கொள்கிறோம்என்றாா் அவா்.