செய்திகள் :

விஸ்வகர்மா திட்டம்: "தற்போதைய வடிவில் செயல்படுத்த இயலாது; ஆனால்.." - மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடிதம்

post image
`மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டமானது சாதி அடிப்படையிலான தொழில் முறையை வலுப்படுத்தும் என்பதால் தற்போதைய வடிவில் அதைச் செயல்படுத்த முடியாது' என மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியிருக்கிறார்.

அந்தக் கடிதத்தில், "ஒன்றிய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும், பிரதமரின் விஸ்வகர்மா திட்டம், சாதி அடிப்படையிலான தொழில் முறையை வலுப்படுத்தும் என்பதால், தற்போதைய வடிவில் அதனைச் செயல்படுத்திட இயலாது. சமூக நீதி அடிப்படையில், தமிழ்நாட்டிலுள்ள கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் விரிவான திட்டம் ஒன்றினை உருவாக்கிட தமிழ்நாடு அரசு முடிவு செய்திருக்கிறது.

விஸ்வகர்மா திட்டம்

மேலும், இந்தத் திட்டத்தை ஆய்வு செய்திட தமிழ்நாடு அரசின் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழு விரிவான ஆய்வின் பரிந்துரைகளான,

* விண்ணப்பதாரரின் குடும்பம், பாரம்பரியமாக குடும்ப அடிப்படையிலான வர்த்தகத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத் தேவை நீக்கப்பட வேண்டும். அதற்குப் பதிலாக, வழிகாட்டுதல்களில் பட்டியலிடப்பட்டுள்ள எந்தவொரு தொழிலையும் மேற்கொள்ள விரும்பும் எந்தவொரு நபரும் இந்தத் திட்டத்தின்கீழ் உதவி பெறத் தகுதியுடையவராக இருக்க வேண்டும்.

* இத்திட்டத்தில் பயன்பெறுவோரின் குறைந்தபட்ச வயது வரம்பினை 35ஆக உயர்த்தலாம். இதனால் தங்கள் குடும்ப வர்த்தகத்தைத் தொடர, அதனை நன்கறிந்தவர்கள் மட்டுமே இந்தத் திட்டத்தின்கீழ் பலன்களைப் பெற முடியும்.

* கிராமப்புறங்களில் பயனாளிகளைச் சரிபார்க்கும் பொறுப்பு கிராம பஞ்சாயத்துத் தலைவருக்குப் பதிலாக, வருவாய்த் துறையைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்."

இவற்றைக் குறிப்பிட்டு திருத்தங்கள் மேற்கொள்ள ஏற்கெனவே பிரதமர் கவனத்துக்குக் கொண்டு சொல்லப்பட்டது.

ஸ்டாலின்

இந்நிலையில், ஒன்றிய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்திலிருந்து 15-3-2024 அன்று வரப்பெற்ற பதிலில், மேற்படி பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே, பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தைத் தற்போதைய வடிவில் செயல்படுத்துவதைத் தமிழ்நாடு அரசு முன்னெடுத்துச் செல்லாது.

மோடி

இருப்பினும், தமிழ்நாட்டில் உள்ள கைவினைஞர்களுக்கு, சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டாத கைவினைஞர்களை உள்ளடக்கி, விரிவான திட்டம் ஒன்றினை உருவாக்கிட தமிழ்நாடு அரசு முடிவு செய்திருக்கிறது. தமிழ்நாடு அரசு செயல்படுத்தவிருக்கும் இந்தத் திட்டம், சாதி மற்றும் குடும்பத் தொழில் வேறுபாடின்றி, மாநிலத்திலுள்ள அனைத்து கைவினைஞர்களுக்கும் முழுமையான ஆதரவை அளிக்கும். இத்தகைய திட்டம் அவர்களுக்கு நிதி உதவி, பயிற்சி மற்றும் அவர்களின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்தையும் விரிவாக உள்ளடக்கியதாக இருக்கும்." என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/ParthibanKanavuAudioBook

கார்ட்டூன்: மகாராஷ்டிரா குறுக்கு(வழி) எழுத்து..!

கார்ட்டூன்: மகாராஷ்டிரா குறுக்கு(வழி) எழுத்து..! மேலும் பார்க்க

Maharashtra: முதல்வர் பதவி விவகாரம்: "பிரதமரின் முடிவை ஏற்பேன்" - சரணடைந்த ஷிண்டே; பாஜக திட்டமென்ன?

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி அமோக வெற்றி பெற்றும் ஆட்சியமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க ஏக்நாத் ஷிண்டே தயக்கம் காட்டி வருகிறார். தற்போது தனது நிலையில... மேலும் பார்க்க

Rain Alert: Cyclone Fengal தாக்கம் எப்படியிருக்கும்? | Modi | Rahul Gandhi | Imperfect Show

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...https://bit.ly/TATAStoryepi01 மேலும் பார்க்க

Maharastra: 'பிரதமரின் முடிவே இறுதி!' - முதல்வர் பதவி குறித்து ஏக்நாத் ஷிண்டே சொல்வதென்ன?

மகாராஷ்டிரா மாநில முதல்வர் பதவி குறித்து பாஜக மேலிடம்தான் இறுதி முடிவு எடுக்கும் என்று சிவசேனா தலைவரும் இடைக்கால முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே தெரிவித்திருக்கிறார்.மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜ... மேலும் பார்க்க

'கலைஞரை வாதத்தில் வென்ற உதயநிதி' - வைரமுத்து பகிர்ந்த வாழ்த்து!

திமுக இளைஞரணித் தலைவரும் தமிழகத்தின் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார்.கட்சித் தொண்டர்கள் பிறந்தநாள் விழாக்களைக் கொண்டாடிவரும் நிலையில், அரசியல் தலைவர்களும் அவருக்கு வா... மேலும் பார்க்க

ராமதாஸ் விவகாரம்: `அவர் மட்டும் முதல்வரை அப்படி பேசலாமா... அது சரியா?' - எம்.பி திருச்சி சிவா கேள்வி

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளே எதிர்க்கட்சிகள், அதானி விவகாரத்தை கையில் எடுத்தன. இதனால் நேற்று இரு அவைகளும் முடங்கியது. தொடர்ந்து இன்றும் இரு அவைகளிலும... மேலும் பார்க்க