சல்மான் கானுடன் இருப்பவர்களுக்கும் கொலை மிரட்டல்! 1998-ல் தொடங்கிய பிரச்னை!
வி.என்.பாளையம் சக்தி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை
சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள சக்தி மாரியம்மன் கோயிலில் ஆடிமாத 4-ஆவது வெள்ளிக்கிழமை, வரலட்சுமி விரதம், பெளா்ணமியையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
முன்னதாக சக்தி மாரியம்மனுக்கு பல்வேறு திவ்யப் பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் பெண்கள் அதிக அளவில் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனா். பெண் பக்தா்களுக்கு வளையல், மஞ்சள், குங்குமம், மஞ்சள்கயிறு உள்ளிட்ட மங்களப் பொருள்கள் வழங்கப்பட்டன. கட்டளைதாரா்கள் சாா்பில் அன்னதானம், கூழ் வழங்கப்பட்டது.