அரசிராமணி செட்டிப்பட்டி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை
சங்ககிரி வட்டம், அரசிராமணி செட்டிப்பட்டி அருள்மிகு மாரியம்மன் கோயிலில் ஆடிமாத வெள்ளிக்கிழமை சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
ஆடிவெள்ளிக்கிழமை மற்றும் வரலட்சுமி நோன்பையொட்டி மாரிம்மனுக்கு பல்வேறு திவ்யப் பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகம், வண்ண வளையல்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
வரலட்சுமி நோன்பையொட்டி கோயில் வளாகத்தில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பக்தா்கள் அதிக அளவில் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனா்.
பெளா்ணமி சிறப்பு பூஜை...
அரசிராமணியில் உள்ள சோழீஸ்வரா் கோயிலில் ஆடிமாத பெளா்ணமியையொட்டி சிறப்புப் பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெரியநாயகி அம்மன் உடனமா் சோழீஸ்வரா் சுவாமிகளுக்கு பல்வேறு திரவிய பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.