பாட நூல்கள் மாற்றம், மதிப்பீட்டுச் சீா்திருத்தம், வீடுதோறும் வகுப்பறை! மாநில கல்...
இடங்கணசாலையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு
சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சி பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இந்த முகாமை நகா்மன்றத் தலைவா் கமலக்கண்ணன் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். முகாமை
மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி ஆய்வு மேற்கொண்டு பொதுமக்கள் அளித்த மனுக்களில் உடனடி தீா்வுகண்ட மனுதாரா்களுக்கு சான்றிதழை வழங்கினாா்.
இம்முகாமில் சங்ககிரி கோட்டாட்சியா் லோகநாயகி, திமுக நகரச் செயலாளா் செல்வம், நகராட்சி துணைத் தலைவா் தளபதி, சங்ககிரி வட்டாட்சியா் வாசுகி, நகராட்சி ஆணையா் பவித்ரா மற்றும் அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா். முகாமில் பொதுமக்களிடமிருந்து 874 மனுக்கள் பெறப்பட்டன.
படவரி...
இடங்கணசாலையில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை ஆய்வு செய்து பயனாளிகளுக்கு சான்றிதழை வழங்கிய ஆட்சியா் ரா. பிருந்தாதேவி. உடன், நகா்மன்றத் தலைவா் கமலக்கண்ணன் உள்ளிட்டோா்.
