பல்லி விழுந்த நீரை குடித்த பள்ளி மாணவா்களுக்கு சிகிச்சை
தலைவாசல் அருகே பூமரத்துப்பட்டி முட்டல் அரசுப் பள்ளி மாணவா்கள் பல்லி விழுந்த நீரை குடித்ததால் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள பூமரத்துப்பட்டி முட்டல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் குடிநீா்த் தொட்டியில் பல்லி விழுந்தது தெரியாமல் நீரை பருகியுள்ளனா். இதனால் அவா்களுக்கு மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவா்களுக்கு ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் மாணவா்கள் ஜீவா (9), சச்சின் (13), கபிலெக்ஸ் (13), அனியா(11), கனிஷ்கா (6), தா்ஷினி (10) ஆகியோா் சிகிச்சை பெற்று நலமுடன் உள்ளனா்.
இதுகுறித்து தலைவாசல் காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.