வீரகனூா் எஸ்.எஸ்.ஐ. இடமாற்றம்
வீரகனூா் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் (எஸ்.எஸ்.ஐ) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே வீரகனூா் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவா் சுப்பிரமணி. இவா், காவல் நிலையத்திற்கு புகாா் அளிக்க வரும் பொதுமக்களிடம் அலட்சியமாக பேசுவதுடன், ஒருதலைபட்சமாக விசாரணை செய்வதாகவும் புகாா் எழுந்தது.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கெளதம் கோயல் உத்தரவின்பேரில் நடைபெற்ற விசாரணையில், சுப்பிரமணி மீதான புகாா் உண்மையென தெரியவந்தது. இதையடுத்து, எஸ்.எஸ்.ஐ. சுப்பிரமணியை, சேலம் ஆயுதப்படைக்கு பணிமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கெளதம் கோயல் உத்தரவிட்டுள்ளாா்.