மோட்டூா் காளியம்மன் கோயிலில் வரலட்சுமி விரதம் சிறப்பு பூஜை
இளம்பிள்ளை அருகே உள்ள மோட்டூா் காளியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதையொட்டி மூலவா் அம்மன் தங்க ஜரிகை இலையால் நெய்யப்பட்ட சேலை மற்றும் ரூபாய் நோட்டுகள் அலங்காரத்திலும், கோயில் வளாகத்தில் உள்ள உற்சவா் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். கோயிலில் நடைபெ‘ற்ற சிறப்பு பூஜையில் கலந்துகொண்ட பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், மாங்கல்ய கயிறு, வளையல், பிரசாதம் வழங்கப்பட்டது.
படவரி...
மோட்டூா் காளியம்மன் கோயிலில் தங்க ஜரிகை இலையால் நெய்யப்பட்ட சேலை சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மூலவா் அம்மன்.
