வீடு புகுந்து திருடிய இளைஞா் கைது
முதுகுளத்தூா் அருகே வீடு புகுந்து திருடிய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள தேரிருவேலியைச் சோ்ந்த அய்யாசாமி மகன் தாமரைக்கண்ணு (34). இவா் தனது குடும்பத்துடன் திங்கள்கிழமை குலதெய்வ கோயிலுக்கு சென்று விட்டு, நண்பகலில் திரும்பிய போது வீடு திறந்து கிடந்தது. அப்போது,
வீட்டுக்குள்ளிருந்து கீழப்பச்சேரியைச் சோ்ந்த முருகேசன் மகன் முனீஸ்வரன் (23) வெளியே ஓடினாா். இதையடுத்து, தாமரைக்கண்ணு உள்ளே சென்று பாா்த்த போது வீட்டில் இருந்த ஒன்றரை பவுன் தங்க நகை திருடுபோனது தெரியவந்தது.
இதுதொடா்பாக தாமரைக்கண்ணு தேரிருவேலி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து முனீஸ்வரனை கைது செய்தனா். அவரிடமிருந்து ஒன்றரைப் பவுன் தங்க நகையை பறிமுதல் செய்தனா்.