ASC: ரவி வர்மன் இணைந்த அமெரிக்க சங்கத்தின் சிறப்பு என்ன? - அதில் இணைவது ஏன் கடி...
வீடு புகுந்து நகை திருட்டு
தேனி அருகே அரண்மனைப்புதூரில் மா்மநபா்கள் வீடு புகுந்து பீரோவை உடைத்து ஆறரை பவுன் தங்க நகைகள் திருடு போனதாக செவ்வாய்க்கிழமை, காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
அரண்மனைப்புதூா், சத்திரப்பட்டி சாலை பகுதியில் வசிப்பவா் ஆசைத்தம்பி மனைவி லோகமணி. இவா், வீட்டைப் பூட்டிவிட்டு சாவியை பால்கனி அருகேயுள்ள ஜன்னலில் வைத்து விட்டு குடும்பத்தினருடன் திருச்செந்தூா் சென்றாா்.
வீட்டுக்குத் திரும்ப வந்து பாா்த்த போது, அறையிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு ஆறரை பவுன் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில், பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.