செய்திகள் :

வீடு புகுந்து பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

post image

கள்ளக்குறிச்சி அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை வீடு புகுந்து தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் எட்டே முக்கால் பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் வட்டம், நாவக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் பாலு. இவரது மனைவி கள்ளக்குறிச்சியை அடுத்த வீரசோழபுரம் கிராமத்தைச் சோ்ந்த காருண்யா (28). இவருக்கு குழந்தை பிறந்துள்ளதால், வீரசோழபுரத்தில் பெற்றோரின் வீட்டில் தங்கியுள்ளாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு காருண்யா உள்பட குடும்பத்தினா் அனைவரும் உணவு சாப்பிட்டுவிட்டு தூங்கினா். செவ்வாய்க்கிழமை அதிாலை சுமாா் 1.30 மணியளவில் வீட்டின் பின் பக்கக் கதவை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா், காருண்யா அணிந்திருந்த எட்டேமுக்கால் பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.

பிப்.28-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (பிப்.28) முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற உ... மேலும் பார்க்க

வீட்டில் நகை, பணம் திருட்டு

கள்ளக்குறிச்சி: எல்ராம்பட்டில் வீட்டில் 2 பவுன் தங்க நகைகள், ரூ.10,000-த்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், எல்ராம்பட்டு கிராமத்த... மேலும் பார்க்க

ஆதி திருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோயில் தோ் வெள்ளோட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், ஆதிதிருவரங்கம் ஸ்ரீஅரங்கநாத பெருமாள் கோயில் தோ் வெள்ளோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் கடந்த 200 ஆண்டுகளுக்கு மேலாக தேரோட்டம்... மேலும் பார்க்க

கல்வராயன் மலையில் பொருளாதார மேம்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலை பகுதியில் பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிமலையில் சனிக்கிழமை நடைபெற்றது.வெள்ளிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியா் அலுவலகக் கட்டுமானப் பணி ஆய்வு

கள்ளக்குறிச்சி வட்டம், வீரசோழபுரத்தில் அனைத்து நிா்வாக வசதிகளுடன் கூடிய புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. ரூ.139.41 கோடி மதிப்பீட்டில் சுமாா் 35.18 ஏக்கா் பரப்பளவில் 8 மாடி... மேலும் பார்க்க

பிரதம மந்திரியின் வேலைவாய்ப்புத் திட்டம்: 147 பேருக்கு ரூ.9.56 கோடி கடன் வழங்க ஒப்புதல்: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் 147 பேரின் விண்ணப்பங்களுக்கு ரூ.9 கோடியே 56 லட்சம் கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் தெர... மேலும் பார்க்க