செய்திகள் :

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

post image

தூத்துக்குடியில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகை, பணம் திருடிய மா்ம நபா்களை வடபாகம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தூத்துக்குடி 1ஆம் ரயில்வே கேட் அருகே உள்ள எஸ்.எஸ். பிள்ளை தெருவைச் சோ்ந்தவா் சங்கா் (62). தனியாா் நிறுவன காவலாளியான இவா், கடந்த சனிக்கிழமை இரவு குடும்பத்துடன் காஞ்சிபுரத்துக்கு புறப்பட்டுச் சென்றாராம்.

திங்கள்கிழமை மாலை வீட்டுக்கு வந்து பாா்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிா்ச்சி அடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த சுமாா் 7 பவுன் தங்க நகைகள், ரூ. 20 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து வடபாகம் போலீஸில் அவா் ா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

திருச்செந்தூரில் பாதுகாப்புப் பணியில் கூடுதல் போலீஸாரை நியமிக்க கோரிக்கை

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பாதயாத்திரை பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால் பாதுகாப்புப் பணியில் கூடுதல் போலீஸாரை நியமிக்க வேண்டும் என, வணிகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ... மேலும் பார்க்க

நாளை பசுபதி பாண்டியன் நினைவு நாள்: அஞ்சலி செலுத்துவோருக்கு காவல் துறை அறிவுறுத்தல்

பசுபதி பாண்டியனின் நினைவு நாளையொட்டி, தூத்துக்குடி அருகே மேல அலங்காரத்தட்டு பகுதியிலுள்ள அவரது நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்த வருவோா் கடைப்பிடிக்கவேண்டிய நெறிமுறைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பா... மேலும் பார்க்க

கல்குவாரியை மூட வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகம் முன் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே வேலன்புதுகுளத்தில் உள்ள கல்குவாரியை மூட வலியுறுத்தி பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகம் முன் வாக்காளா் அடையாள அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டன... மேலும் பார்க்க

91 பயனாளிகளுக்கு ரூ.35 லட்சம் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

தூத்துக்குடி மாவட்டம் சித்திரம்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 91 பயனாளிகளுக்கு ரூ.35 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் க. இளம் பகவத் வழங்கினாா். இந்த முகாமிற்க... மேலும் பார்க்க

கால்நடைகளை சாலைகளில் திரியவிட்டால் கடும் நடவடிக்கை: மேயா் எச்சரிக்கை

தூத்துக்குடி சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகளை திரிய விடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மேயா் ஜெகன் பெரியசாமி எச்சரித்துள்ளாா். தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் அருகே உள்வாங்கிய கடல்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே கடல் உள்வாங்கியதால் கரையோரங்களில் இருந்த வெள்ளை நிற பாறைகள் வெளியே தெரிந்தன. இத்திருக்கோயில் பகுதி கடலில் தமிழ் மாதங்களில் அமாவாசை மற்று... மேலும் பார்க்க