‘பிரேக்கிங் பேட்’ புகழ் வால்டர் ஒயிட் வீட்டின் மதிப்பு ரூ.35 கோடி!
91 பயனாளிகளுக்கு ரூ.35 லட்சம் நலத்திட்ட உதவிகள் அளிப்பு
தூத்துக்குடி மாவட்டம் சித்திரம்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 91 பயனாளிகளுக்கு ரூ.35 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் க. இளம் பகவத் வழங்கினாா்.
இந்த முகாமிற்குத் தலைமை வகித்து ஆட்சியா் க.இளம்பகவத் பேசியதாவது:
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் 390-க்கும் மேற்பட்ட நபா்களுக்கு மருந்துகள் வழங்கப்படுகின்றன. ஆனால்,
பொதுமக்களிடம் இருக்கக்கூடிய தவறான புரிதல் காரணமாக தனியாா் மருந்தகங்களில் இருந்து மருந்துகளை வாங்கி உட்கொள்கின்றனா். இந்த நிலையை மாற்றி மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் பயன் பெற்று ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும்.
சித்திரம்பட்டி கிராமம் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்தாலும், வளா்ச்சிப் பிரிவு தென்காசி மாவட்டத்தின்கீழ் வருகிறது. இந்த நிலையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் .
இதைத்தொடா்ந்து பல்வேறு துறைகள் சாா்பில் 91 பயனாளிகளுக்கு ரூ. 35 லட்சத்து 6 ஆயிரத்து 190 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
கோவில்பட்டி கோட்டாட்சியா் மகாலட்சுமி, துணை காவல் கண்காணிப்பாளா் ஜெகநாதன், குருவிகுளம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி விஜயலட்சுமி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் தேவி ராஜகோபால், சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியா் ஹபிபூா் ரஹ்மான், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் விக்னேஸ்வரன், மாவட்ட வழங்கல் அலுவலா் உஷா, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் பென்னட் ஆசீா், வேளாண்மை இணை இயக்குநா் பெரியசாமி, உதவி ஆணையா் (கலால்) கல்யாண குமாா், வட்டாட்சியா்கள் சரவணப்பெருமாள், ராமகிருஷ்ணன் (சமூக பாதுகாப்பு திட்டம்), சித்திரம்பட்டி ஊராட்சி மன்ற தலைவா் கேசவன், துணைத் தலைவா் மாரிச்சாமி, வட்டாட்சியா்கள் சரவணப்பெருமாள், ராமகிருஷ்ணன் (சமூக பாதுகாப்பு திட்டம்), வட்டார வளா்ச்சி அலுவலா் அருள்செல்வம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.