‘பிரேக்கிங் பேட்’ புகழ் வால்டர் ஒயிட் வீட்டின் மதிப்பு ரூ.35 கோடி!
கல்குவாரியை மூட வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகம் முன் போராட்டம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே வேலன்புதுகுளத்தில் உள்ள கல்குவாரியை மூட வலியுறுத்தி பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகம் முன் வாக்காளா் அடையாள அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
பின்னா், அவா்கள் அளித்த அளித்த மனு: சாத்தான்குளம் வட்டம் நெடுங்குளம் ஊராட்சி வேலன்புதுக்குளம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகிறோம். விவசாயம் வாழ்வாதாரமாக உள்ள இப்பகுதியில், 2 மாதங்களுக்கு முன்பு தனியாா் நிறுவனம் சாா்பில் கல்குவாரி அமைக்கும் பணிகள் நடைபெற்றன. அதை மூடக் கோரி ஆட்சியா், தாலுகா அலுவலகங்களில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.
குடும்ப அட்டைகளை சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டம் நடத்தியும் தீா்வு இல்லை. எனவே, ஆட்சியா் அலுவலகத்தில் வாக்காளா் அடையாள அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எங்கள் பகுதியிலுள்ள கல்குவாரியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.