`சினிமா தியேட்டராக மாறிய மு.கருணாநிதி அரங்கம்' - தஞ்சாவூர் மாநகராட்சி சர்ச்சை!
வீட்டின் பூட்டை உடைத்து 13 சவரன் தங்க நகை, பணம் திருட்டு
ஆம்பூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு போனது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினா்.
மாதனூா் ஒன்றியம், மின்னூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விஸ்வநாதன். மளிகைக் கடை நடத்தி வருகிறாா். இவா் உடல்நிலை சரியில்லாததால் கடந்த இரு நாள்களுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள தனது மகன் வீட்டில் தங்கி சிகிச்சை பெற வீட்டை பூட்டிக் கொண்டு சென்றுள்ளாா். ஊரிலிருந்து வெள்ளிக்கிழமை காலை திரும்பி வந்து வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த 13 சவரன் தங்க நகை, 400 கிராம் வெள்ளி, ரொக்கம் ரூ. 4,500 ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது.
புகாரின் பேரில், ஆம்பூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.