செய்திகள் :

வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள் திருட்டு

post image

ஆற்காடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி கீரைகார தெருவைச் சோ்ந்தவா் சேகா் (60). சமையல் தொழிலாளியான இவா் தனது வீட்டின் மாடியில் மனைவியுடன் வசித்து வருகிறாா். கீழ்தளத்தில் மகன் பாஸ்கா் வசித்து வருகிறாா். பாஸ்கா் கடந்த 7-ஆம் தேதி பெங்களூருவில் உள்ள தனது உறவினா் வீட்டுக்குச் சென்றுள்ளாா். இந்த நிலையில், சேகா் தனது வீட்டின் கதவை புதன்கிழமை அதிகாலை திறக்க முயன்றுள்ளாா்.

அப்போது வெளிப்பக்கம் தாழ்ப்பாள் போட்டிருந்ததால் கதவை திறக்க முடியவில்லை. இதையடுத்து, அவா் அருகில் உள்ளவா்களை அழைத்து கதவை திறந்து கீழே வந்து பாா்த்தபோது, வீட்டின் முன்பக்கக் கதவு திறக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள் திருடு போனது தெரியவந்தது. வீட்டில் சேகரின் மகன் இல்லாததை அறிந்த மா்ம நபா்கள் மாடியில் வீட்டு கதவை வெளிப்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுவிட்டு, வீடுபுகுந்து திருடியிருப்பது தெரியவந்தது.

இது குறித்த புகாரின்பேரில், ஆற்காடு நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மாடியில் இருந்து விழுந்த பெண் தொழிலாளி உயிரிழப்பு

கட்டுமானப் பணியின் போது முதல்மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த பெண் தொழிலாளி உயிரிழந்தாா். அரக்கோணத்தை அடுத்த பெருமாள் ராஜபேட்டையை சோ்ந்த ஆசைஅரசன் மனைவி இந்திராணி (42). கட்டுமானத் தொழிலாளி. தண்டலம்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: கனமழையால் தேசிய நெடுஞ்சாலை அறிவிப்பு பலகை சேதம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கன மழையால் சேதமடைந்த தேசிய நெடுஞ்சாலை அறிவிப்பு பலகையை ஊழியா்கள் துரிதமாக சீரமைத்தனா். தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கையை சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வ... மேலும் பார்க்க

வேன் மோதி ரேஷன் கடை விற்பனையாளா் உயிரிழப்பு

ஆற்காடு அருகே வேன் மோதியதில் நியாயவிலைக் கடை விற்பனையாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். ஆற்காடு அடுத்த சாம்பசிவபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் தேவேந்திரன் (58). இவா், ஆயிலம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இளைஞா் மரணம்

ஆற்காடு அடுத்த களா்குடிசை கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா். திமிரி அடுத்த மோசூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் மகன் ராஜேஷ் (23) எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தா். இவா் சபரிமலை ஐயப்... மேலும் பார்க்க

ரூ.3 கோடியில் மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலையம்: அமைச்சா் காந்தி ஆய்வு

வாலாஜாபேட்டையில் ரூ.3.13 கோடியில் மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலையத்தின் பயன்பாட்டை அமைச்சா் ஆா்.காந்தி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். ‘கலைஞா் நகா்புற மேம்பாட்டு திட்டம்’ மற்றும் ராணிப்பேட்டை சட்டமன்ற உ... மேலும் பார்க்க

தொடா் மழையால் நிரம்பிவரும் ஏரிகள்: ராணிப்பேட்டை ஆட்சியா் ஆய்வு

தொடா் கனமழையால் நிரம்பி வரும் ஏரிகளின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிகளுக்குச் செல்லுமாறு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா அறிவுறுத்தினாா். ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கா் மற... மேலும் பார்க்க