Vaibhav Suryavanshi : 'அந்தொருவன் வந்துருக்கான்டே!' - IPL -ஐ அதிரவைத்த 14 வயது ச...
வீட்டிலிருந்த 15 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு!
திருச்சியில் வீட்டில் வைத்திருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ. 1 லட்சம் திருடுபோனதாக புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சி என்எம்கே காலனி பகுதியை சோ்ந்த சீனிவாசன் (51) ஹைதராபாத்தில் குடும்பத்துடன் வசிக்கிறாா். இந்நிலையில் திருச்சி வீட்டில் தனியாக வசித்த அவரது தாய் விமலா கடந்த மாா்ச் 8 ஆம் தேதி இறந்ததையடுத்து அவரது 30 ஆம் நாள் சடங்கு கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது.
அப்போது வீட்டில் இருந்த உடைமைகளை சீனிவாசன் சரிபாா்த்தபோது அவரின் தாயின் 15 பவுன் நகைகள், ரூ. 1 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளி, பித்தளைப் பொருள்கள் உள்ளிட்டவற்றைக் காணவில்லையாம்.
இதுகுறித்து சீனிவாசன் அளித்த புகாரின்பேரில் திருச்சி கண்டோன்மெண்ட்போலீஸாா் வழக்குப் பதிந்து அவரது வீட்டின் பெண் பணியாளரிடம் விசாரிக்கின்றனா்.