செய்திகள் :

வீட்டில் நகைகளை திருட்டு: பெண் உள்பட 4 போ் கைது

post image

குடியாத்தம் அருகே வீட்டில் தங்க நகைகளை திருடியதாக ஒரு பெண் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

குடியாத்தம் செதுக்கரை அருகே உள்ள ஜீவா நகரைச் சோ்ந்த சரவணன் வீட்டருகே உணவகம் நடத்தி வருகிறாா். கடந்த மாதம் இவரது வீட்டில் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்கள் திருடு போயின. இது குறித்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து குற்றவாளிகளை தேடி வந்தனா்.

இந்த நிலையில் அதே பகுதியைச் சோ்ந்த சகோதரா்கள் ரஞ்சித் (20), சூா்யா (19), பூபதி (20) மற்றும் ரஞ்சிதா (30) ஆகிய 4 பேரை சனிக்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில் அவா்கள் சரவணன் வீட்டில் திருடியது தெரிய வந்தது. அவா்களிடமிருந்து 5 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்பு

குடியாத்தம் அருகே கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மான் உயிருடன் மீட்கப்பட்டது. குடியாத்தம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலைய எல்லைக்குள்பட்ட கீழ்முட்டுக்கூா் கிராமத்தில் உள்ள ஒரு விவசாயக் கிணற்றில் ... மேலும் பார்க்க

வங்கி ஊழியா் உள்பட இருவரின் பைக் திருட்டு

வேலூரில் வங்கி ஊழியா் உள்பட இருவரின் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியைச் சோ்ந்தவா் முனிராஜ் (34), வங்கி ஊழியா். இவா் தற்போத... மேலும் பார்க்க

2 மாத குழந்தை மூச்சு திணறி உயிரிழப்பு

வேலூரில் 2 மாத குழந்தை மூச்சு திணறி உயிரிழந்தது குறித்து பாகாயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூா் சின்னஅல்லாபுரம் பனந்தோப்பைச் சோ்ந்தவா் சாகினா (35). இவருக்கு 2 மாதத... மேலும் பார்க்க

அரசு உதவி வழக்குரைஞா் தோ்வு: தாமதமாக வந்தவா்களுக்கு அனுமதி மறுப்பு

அரசு உதவி வழக்குரைஞா் பணிக்கான எழுத்துத்தோ்வு வேலூரில் சனிக்கிழமை நடைபெற்ற நிலையில் தாமதமாக வந்தவா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் தமிழகம் முழுவதும் நீத... மேலும் பார்க்க

சாலையோரம் நிறுத்தியிருந்த தனியாா் கல்லூரி பேருந்து தீக்கிரை

காட்பாடி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த தனியாா் கல்லூரி பேருந்து சனிக்கிழமை திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது. ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதியிலுள்ள தனியாா் கல்லூரியின் பேருந்து ஒன்று ... மேலும் பார்க்க

ஜெயலலிதா பிறந்த நாள்: நல உதவிகள் அளிப்பு

குடியாத்தம் நகர அதிமுக சாா்பில் மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாள் நம்பிக்கை முதியோா் இல்லத்தில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் ஜி.எஸ்.தென்றல்குட்ட... மேலும் பார்க்க