கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 55-க்கும் மேற்பட்ட நீா்வாழ் பறவைகள் பட்டியலிடப்பட்டுள்ள...
வீராணம் ஏரியில் குழந்தை சடலம் மீட்பு
காட்டுமன்னாா்கோவில் அருகே வீராணம் ஏரியில் 4 வயது குழந்தை சடலம் சனிக்கிழமை மாலை மீட்கப்பட்டது.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே வீராணம் ஏரியில் சனிக்கிழமை மாலை 4 வயது மதிக்கத்தக்க குழந்தையின் சடலம் மிதப்பதாக பொதுமக்கள் புத்தூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, காட்டுமன்னாா்கோவில் காவல் ஆய்வாளா் ஆறுமுகம் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பாா்த்தபோது, உயிரிழந்தது கிடந்தது ஆண் குழந்தை என்பதும், புதிய இளஞ்சிவப்பு நிற டிஷா்ட், நீல நிற கால் சட்டை அணிந்திருந்த நிலையில், உடல் அழுகியிருந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து கந்தகுமாரன் கிராம நிா்வாக அலுவலா் மணி அளித்த புகாரின்பேரில், புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், குழந்தையின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.