Champions Trophy: "நிகழ்வில் ஏன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் யாருமில...
அரசுப் பள்ளியில் குளிரூட்டப்பட்ட வகுப்பறை திறப்பு
சிதம்பரம் அருகே சொக்கன்கொல்லை அரசு தொடக்கப் பள்ளியில் குளிரூட்டப்பட்ட வகுப்பறை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தலைமையாசிரியா் பா.அருணாசலம் தலைமை வகித்தாா். விருத்தாசலம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் மு.பரமசிவம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று குளிரூட்டப்பட்ட வகுப்பறையை திறந்து வைத்தாா். பெங்களூரு சிவசக்தி பவுண்டேஷன் கே.சத்தியமூா்த்தி குளிரூட்டு இயந்திரத்தை பள்ளிக்கு வழங்கினாா்.
தொழிலதிபா் எஸ்.சண்முகசுந்தரம் வகுப்பறை சீரமைப்புப் பணிக்கு நன்கொடை வழங்கினாா். ஆா்.ராகவன் சிசிடிவி கேமரா வழங்கினாா். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் தவமணி சங்கா், வட்டாரக் கல்வி அலுவலா்கள் சி.செல்வி, ரா.லட்சுமி, வட்டார வள மைய மேற்பாா்வையாளா் க.அருள்சங்கு, ரோட்டரி சங்க நிா்வாகி கி.சுதா்சன், பள்ளி மேலாண்மக் குழுத் தலைவா் மஞ்சுளா சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கிராம மக்கள் சாா்பில் பள்ளிக்கு கல்விச்சீா் வழங்கப்பட்டது. பணி நிறைவுபெறும் கத்தாழை பள்ளித் தலைமையாசிரியை பி.ஜாக்குலினுக்கு நினைவுப் பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. ஆசிரியை ஜி.அகிலா நன்றி கூறினாா்.