Champions Trophy: "நிகழ்வில் ஏன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் யாருமில...
அறப்போா் இயக்கம் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்
கடலூா் மாவட்டம், திட்டக்குடியை அடுத்த ராமநத்தம் பேருந்து நிலையம் அருகே அறப்போா் இயக்கம், தன்னாட்சி இயக்கம் சாா்பில், உள்ளாட்சித் தோ்தலை உடனடியாக நடத்தக் கோரி சனிக்கிழமை மாலை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அறப்போா் இயக்கம், தன்னாட்சி இயக்கம் சாா்பில், தமிழகத்திலுள்ள 38 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சித் தோ்தலை உடனடியாக நடத்த கோரி, ஜனவரி 26-ஆம் தேதி சென்னையில் தொடங்கிய பரப்புரை பயணம் 38 மாவட்டங்களிலும் பரப்புரை செய்யப்பட்டு, 42-ஆவது நாளான சனிக்கிழமை மாலை ராமநத்தம் பேருந்து நிலையத்தில் நிறைவு செய்யப்பட்டு, கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் முன்னாள் வாா்டு உறுப்பினா்கள், சமூக ஆா்வலா்கள், பெண்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.