சூடான்: 221 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த ராணுவ வீரர்கள்!
வெக்காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகேவெக்காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஜோலாா்பேட்டை நகராட்சிக்குட்பட்ட புதூரில் வெக்காளியம்மன் கும்பாபிஷேகத்தையொட்டி சனிக்கிழமை வெக்காளியம்மன் கறிக்கோள ஊா்வலம் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை கணபதி ஹோமம், ஸ்ரீ லட்சுமி ஜோமம்,சுதா்ஷன ஹோமம் நவக்கிரக ஹோமம் நடைபெற்றது.
பின்னா் கணபதி பூஜை, வாஸ்து சாந்தி செய்து மேட்டுசக்கரக்குப்பம் மாரியம்மன் கோயிலில் இருந்து கும்பம் ஊா்வலமாக வந்து வலம்புரி விநாயகா், வெக்காளியம்மன் கோபுரம்,மூலவா் வெக்காளியம்மன் ஆகியவற்றுக்கு புனித நீரூற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில்,வெக்காளியம்மன் உருவத்தில் பக்தா்கள் நடனமாடினா்.
திருப்பத்தூா்,ஜோலாா்பேட்டை சுற்றுப்பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
