தனியே சந்தித்த அண்ணாமலை; மாறுவாரா தினகரன்? - கூட்டணிக் கணக்கில் அடுத்தக்கட்ட நகர...
வெடிகுண்டு எச்சரிக்கை! சென்னை அக்கவுண்ட் ஜெனரல் அலுவலகத்தில் சோதனை!
சென்னை தேனாம்பேட்டையில் முதன்மை கணக்காளர் ஜெனரல் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதையடுத்து சோதனை நடைபெற்று வருகிறது.
இந்தியா முழுவதுமே சமீபமாக வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வருகின்றன. சோதனைக்குப் பின்னர் அவை புரளி என தெரிய வருகிறது.
சென்னையிலும் உயர்நீதிமன்றம், ஜிஎஸ்டி அலுவலகம், வானிலை ஆய்வு மையத்திற்கு கடந்த வாரங்களில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
இதைத் தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டையில் முதன்மை கணக்காளர் ஜெனரல் அலுவலகத்திற்கு இன்று(செவ்வாய்க்கிழமை) வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதையடுத்து அங்குள்ள ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது.
வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
Bomb threat to Chennai principal Accountant General office
இதையும் படிக்க | பெண்கள் இரவில் தனித்துப் பயணமா? கண்டிப்பாகச் செய்ய வேண்டியவை என்ன?