வெடி விபத்து நடைபெற்ற பட்டாசு ஆலையில் அதிகாரிகள் ஆய்வு
சிவகாசி அருகே வெடிவிபத்து நடைபெற்ற பட்டாசு ஆலையில் திங்கள்கிழமை வெடிபொருள் கட்டுப் பாட்டுத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.
காளையாா்குறிச்சியில் ஜெய்சங்கருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த சனிக்கிழமை வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 பெண் தொழிலாளா்கள் உரியிழந்தனா். இந்த நிலையில், விபத்து நடைபெற்ற பட்டாசு ஆலையில் சிவகாசி வெடிபொருள் கட்டுப் பாட்டுத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா். பின்னா், ஆலையில் சிதறி கிடந்த வேதியியல் பொருள்களை அவா்கள் சேகரித்தனா்.
இந்த வேதியியல் பொருள்கள் ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பப்பட்டு பரிசோதனை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.