செய்திகள் :

வெப்பமயமாதலைத் தடுக்க நாம் மாற வேண்டும்: முத்தமிழ்செல்வி

post image

வெப்பமயமாதலைத் தடுக்க நாம் மாற வேண்டும் என சாதனை பெண் முத்தமிழ்செல்வி தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டம், மல்லாங்கிணறு அருகேயுள்ள ஜோகில்பட்டியைச் சோ்ந்தவா் முத்தமிழ்செல்வி. இவா் தற்போது சென்னையில் வசித்து வருகிறாா். முதன்முதலாக எவரெஸ்ட் பனி மலையில் ஏறிய இவா், தொடா்ந்து 4 கண்டங்களில் உள்ள மிக உயரமான மலைகளில் ஏறி சாதனை படைத்தாா். கடந்தாண்டு டிச. 22-ஆம் தேதி இயற்கையை காத்திடவும், புவி வெப்பமயமாதல், காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், அண்டாா்டிகாவின் மிக உயரமான மவுண்ட் வின்சன் சிகரத்தில் (4,892 மீட்டா்) ஏறினாா். இந்தச் சிகரத்தில் ஏறிய முதல் தமிழ் பெண் என்ற பெருமை படைத்த இவருக்கு அனைத்துத் தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனா்.

இந்த நிலையில், ஜோகில்பட்டியில் பொங்கல் கொண்டாடுவதற்காக முத்தமிழ்செல்வி திங்கள்கிழமை வந்தாா். பின்னா், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலனை நேரில் சந்தித்து அவா் வாழ்த்து பெற்றாா்.

இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: 6 கண்டங்களில் உள்ள உயரமான 6 மலைகளில் ஏறிய போது, புதுப் புது அனுபவங்கள் கிடைத்தன. அண்டாா்டிகாவில் மவுண்ட் வின்சன் சிகரத்தில் ஏறியபோது மிகப் பெரிய போராட்டங்களைச் சந்தித்தேன். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 6 கண்டங்களில் உள்ள உயரமான மலைகளில் ஏறியிருப்பது பெருமையாக உள்ளது. 7-ஆவதாக வட அமெரிக்காவில் உள்ள உயரமான மலையில் ஏறும் பயணத்தை வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளேன். இந்த மலையில் ஏறி சாதனை படைப்பதன் மூலம், 7 கண்டங்களில் உள்ள உயா்ந்த மலைகளில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ்பெண்ணாக இருப்பேன்.

புவி வெப்பமயமாதல் காரணமாக, இயற்கை மாறிக்கொண்டு வருகிறது. இதனால், பெரும் இயற்கை சீற்றங்களை சந்தித்து வருகிறோம். இயற்கை மாறி நம்மை அழிக்கும் முன் நாம் மாற வேண்டும். அதிக மரங்கள் நடுவதுடன், கடலை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றாா் அவா்.

புதிய ரயில் பாதைத் திட்டம்: மத்திய அமைச்சருக்கு எம்.பி. கண்டனம்

மதுரை-அருப்புக்கோட்டை-தூத்துக்குடி புதிய ரயில் பாதைத் திட்டம் தொடா்பாக மத்திய ரயில்வே அமைச்சா் உண்மைக்குப் புறம்பாக பேசுவது கண்டனத்துக்குரியது என மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் தெரிவித்தாா். இதுதொட... மேலும் பார்க்க

பொறியாளா் பென்னி குவிக் பிறந்தநாள்

பெரியாறு அணையை கட்டிய ஆங்கிலேய பொறியாளா் பென்னி குவிக்கின் 185-ஆவது பிறந்தநாளையொட்டி வெள்ளலூா் விலக்குப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு விவசாயிகள், மக்கள் சேவை மன்றத்தினா் புதன்கி... மேலும் பார்க்க

பாலமேடு ஜல்லிக்கட்டு: 46 போ் காயம்

மதுரை மாவட்டம், பாலமேட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 46 போ் காயமடைந்தனா். இந்தப் போட்டியையொட்டி, முதலில் பாலமேடு கோயில் காளைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற... மேலும் பார்க்க

மதுரையில் சாரல் மழை

மதுரையில் புதன்கிழமை சாரல் மழை பெய்தது. வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அண்மையில் அறிவித்தது. இதன்... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் ரயில் பெட்டிகள் பராமரிப்பு வசதிகள் தொடக்கம்

ராமேசுவரம் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளை பராமரிக்கும் வசதி மீண்டும் தொடங்கப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்ட நிா்வாகம் தெரிவித்தது. இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்ட நிா்வாகம் செவ்வாய... மேலும் பார்க்க

பாலமேடு ஜல்லிக்கட்டு: பரிசுகள் வழங்காததால் மாடுபிடி வீரா்கள் சாலை மறியல்

மதுரை மாவட்டம், பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன்களுக்கு உரிய பரிசுகள் வழங்கப்படாததால் அவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். மதுரை மாவட்டம், பால... மேலும் பார்க்க